அமைச்சரவையில் இடம்பெறாத உதயநிதி! காரணம் இதனால் தானா? அதிர்ச்சியில் இளைஞரணி!
தமிழக சட்டசபை தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் பெரும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் சேப்பாக்கம் மற்றும் திருவல்லிக்கேணியில் வெற்றிபெற்றார்.
போட்டியிட்ட முதல் தேர்தலியேயே வெற்றி பெற்றதால், அவர் மீது பலத்த எதிர்பார்ப்பு எழுந்தது. தந்தையை மிஞ்சிய மகன் என்றும் பலரால் பேசப்பட்டார்.
இதனையடுத்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமையவுள்ள அமைச்சரவையில் உதயநிதிக்கு இடம் கிடைக்கும் என்றும் பலதரப்பில் எதிர்பார்க்கப்பட்டு வந்தது.
ஆனால், திமுக அமைச்சரவைப் பட்டியலில் உதயநிதியின் பெயர் இடம்பெறவில்லை. மொத்தம் ஒதுக்கப்பட்டுள்ள 34 துறைகளில் உதயநிதிக்குத் துறை ஒதுக்கப்படவில்லை.
அதிமுகவிலிருந்து திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜிக்கு அமைச்சரவையில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், உதயநிதி இடம்பெறாததுக்கு ஸ்டாலின் கட்சித் தலைவரானது, தற்போது முதல்வராவது என அனைத்தையும் எதிர்கட்சிகள் வாரிசு அரசியல் என்று கூறிவருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து, உதயநிதி தற்போது கண்ணை நம்பாதே, ஏஞ்சல், ஆர்டிக்கிள் 15 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
அமைச்சர் பதவி வழங்கப்பட்டால் அதன்பின் நடிக்க முடியுமா? நடித்தால் எதிர்கட்சிகள், மக்கள் என்ன கூறுவார்கள் என்பதால் தற்போது அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை என்று தெரிகிறது.
இருந்தாலும், திமுக அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும் போது உதயநிதி ஸ்டாலினுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று தகவல்கள் கிடைக்கின்றன.