வீடே வெறிச்சோடி இருக்கு: எந்த பெரிய நடிகரும் வரவில்லை? நடிகர் மதன் பாப்க்கு இப்படி ஒரு நிலையா?
பிரபல நகைச்சுவை நடிகரும், பன்முகக் கலைஞருமான மதன் பாப் தனது 71ஆவது வயதில் நேற்று காலமானார்.
இவரின் வீடே வெறிச்சோடி இருக்கும் நிலை காணப்படுவதாகவும் எந்த நடிகரும் வரவில்லை எனவும் தற்போது வெளியாகியுள்ள தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகர் மதன் பாப்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ்பெற்றவர் தான் நடிகர் மதன் பாப்.
இவர், நடிகர் விஜய்யின் பூவே உனக்காக, ப்ரண்ட்ஸ், கண்ணுக்குள் நிலவு, யூத், நடிகர் அஜித் குமாரின் வில்லன், கமல்ஹாசனின் பம்மல் கே சம்மந்தம், வசூல் ராஜா எம்பிபிஎஸ் உள்பட 150 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
குறிப்பாக அவருடைய முகபாவனைகள், தனித்துவச் சிரிப்பு மிகவும் பிரபலம். சமீபத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அதற்காக சிகிச்சை எடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி மருத்துமவனையில் காலமானார்.
தனது வித்தியாசமான சிரிப்பால் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த இவர், சினிமா நடிகர் மட்டுமின்றி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்து வந்தார்.
நிகழ்ச்சி தொகுப்பாளர், நிகழ்ச்சி நடுவர் உள்ளிட்ட பணிகளையும் செய்த இவரின் இறுதி சடங்கில் இவர் பணியாற்றிய அசத்த போவது யாரு... நிகழ்சி குழுவில் இருந்து யாரும் வரவில்லை எனவும் நடிகர்கள் யாரும் வரவில்லை எனவும் ஒரு செய்தி வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |