நிவேதா பெத்துராஜ் காதலரை மணந்தாரா ஜூலி? சர்ச்சையில் சிக்கிய நிச்சயதார்த்தம்
நிவேதா பெத்துராஜ் திருமணம் செய்துக் கொள்ளப்போவதாக வெளியிட்ட புகைப்படங்களில் உள்ளவரை தான் ஜூலி தற்போது நிச்சயதார்த்தம் செய்துள்ளார் என்ற செய்தி ஆதாரங்களுடன் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ் புகழ் ஜூலி
கடந்த 2017ம் ஆண்டு தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமானவர் தான் ஜூலி.
அதில் அவரது போராட்ட திறனை கண்டு மக்கள் தமிழ்பெண், வீர தமிழச்சி என்றெல்லாம் புகழ்ந்து பேசினார்கள். அந்த சமயத்தில் பிரபல தொலைக்காட்சியில் இருந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு வந்தது.
அதனை பயன்படுத்திய ஜூலி உள்ளே சென்று பல சர்ச்சைகளுக்கு முகங்கொடுத்தார். முதல் சீசனில் ஜூலிக்காக தான் குறும்படம் போடப்பட்டது என்ற பெறுமையும் அவரையே சாரும். பிக்பாஸ் வீட்டிலுள்ள சக போட்டியாளர்களை தன்னுடைய வில்லத்தினால் மிரட்டிய ஜூலி, ஓவியாவுடன் நெருக்கமாக இருந்து பிரபலமானார்.

நிகழ்ச்சியின் மூலம் பெயரும் புகழும் தேடிக் கொண்ட இவருக்கு திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
நிவேதா பெத்துராஜ் ஏமாற்றப்பட்டாரா?
இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும்ஜூலி துபாயில் தொழிலதிபராக இருக்கும் ராஜ் ஹித் இப்ரான் என்பவரை நிச்சயதார்த்தம் செய்துக் கொண்டுள்ளார்.
சுமாராக 3 மாதங்களுக்கு முன்னர் தமிழ் சினிமாவில் நாயகியாக சில படங்களில் நடித்த நடிகை நிவேதா பெத்துராஜ் திருமணம் செய்துக் கொள்வதாக ராஜ் ஹித் இப்ரானுடன் நெருக்கமான புகைப்படங்களை பகிர்ந்திருந்தார்.

அதன் பின்னர், ஜூலியின் முன்னாள் காதலரை தான் நிவேதா பெத்துராஜ் காதலித்து வருகிறார் என்ற செய்தி வைரலானது. அதற்கு நிவேதா பெத்துராஜ் மறுப்பு தெரிவித்த நிலையில், தற்போது திருமண நிச்சயதார்த்தம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜூலி- ராஜ் ஹித் இப்ரான் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகிய பின்னர், நிவேதா பெத்துராஜ் அவருடைய சமூக வலைத்தளங்களில் ராஜ் ஹித் இப்ரானுடன் இருந்த புகைப்படங்களை நீக்கியுள்ளார்.
இந்த செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
