ஈறு அழற்சி பிரச்சினை முடிவுக்கட்டும் பூண்டு சாறு.. ஆய்வில் உறுதி!
உடல் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு வாய்வழி சுகாதாரமும் அவசியம். பற்கள் மற்றும் ஈறுகளில் பிரச்சினை இருந்தால் உணவு உண்ண முடியாத நிலை கூட உருவாகலாம்.
இதனால் முடிந்தளவு வாயை சுகாதாரமாகவும், ஆரோக்கியமாகவும் பார்த்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக ஈறுகள் மற்றும் பற்களுக்கு ஆரோக்கியம் தரும் கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளல்.
ஈறு அழற்சி (Gingivitis) என்பது மோசமான வாய்வழி பிரச்சினையாகும். உங்களுடைய ஈறுகளில் வீக்கம், இரத்தப்போக்கு, சிவத்தல் மற்றும் வாய் துர்நாற்றம் ஆகிய பிரச்சினைகள் வருமாயின் உடனடியாக வைத்தியம் செய்ய வேண்டும்.
நாளடைவில் இதன் காரணமாக உங்களுடைய பற்களில் சொத்தை, கீழே விழுவதற்கும் வாய்ப்பு உள்ளது. பீரியண்டோன்டிடிஸ் போன்ற கடுமையான நிலைமைகளும் வரலாம்.
அந்த வகையில், ஈறு அழற்சி (Gingivitis) பிரச்சினை இருப்பதை எப்படி கண்டுபிடிக்கலாம்? அதற்கான இயற்கை வைத்தியம் என்ன? என்பதையும் பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
ஈறு அழற்சி (Gingivitis)

அறிகுறிகள்
1. உங்களுடைய ஈறுகள் பார்ப்பதற்கு வீங்கிய, அடர் சிவப்பு நிறத்தில் இருந்தால் ஈறுகளில் பிரச்சினை இருப்பது உறுதி.
2. பல் துலக்கும் போது ரத்தம் வந்தால் ஈறுகளில் பிரச்சினை இருக்கலாம்.
3. சிலர் பக்கத்தில் வரும் பொழுது வாய் துர்நாற்றம் (Halitosis)இருக்கும். இதனால் நம்மால் அவர்களிடம் சரியாக பேச முடியாத நிலை இருக்கும். இதற்கான முக்கிய காரணம் ஈறுகளில் பிரச்சினையாக இருக்கலாம்.
4. வேர்கள் வெளியே தெரியும். இதனால் நீங்கள் சிரிக்கும் பொழுது மற்றவர்களுக்கு ஒருவிதமான அச்சத்தை ஏற்படுத்தும்.

காரணங்கள்
- ஈறுகளில் பிளேக் (Plaque) மற்றும் டார்ட்டர் (Tartar) படிதல் காரணமாக இந்த நிலைமை உருவாகும்.
- வைட்டமின் குறைபாடுகள் இருந்தாலும் ஈறுகளின் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.
- இளம் வயதில் உள்ளவர்களுக்கு ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக ஈறுகளில் பிரச்சினை ஏற்படலாம். ஆரம்ப நிலையில் இருக்கும் பொழுதே சரிச் செய்வது சிறந்தது.
- மருத்துவ நிலைகள் காரணமாக ஈறுகளில் தொற்றுக்கள் மற்றும் அரிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. உரிய சிகிச்சை, பரிசோதனை இருந்தால் உங்களுடைய பற்களை காப்பாற்றலாம்.

- புகைபிடித்தல், மற்றும் மரபியல் காரணங்களால் வாய்வழி சுகாதாரம் பாதிக்கப்படலாம். முடிந்தளவு புகைப்பிடிப்பது, மது அருந்துவது மற்றும் பிற போதை பொருள் பழக்கங்களால் கூட ஈறுகளில் பிரச்சினை வரலாம்.
பூண்டு மவுத்வாஷ்
குளோரெக்சிடைன் மவுத்வாஷ் (Chlorhexidine mouthwash) நீண்டகாலமாக பற்களின் ஆரோக்கியத்தை பாதுகாத்து வருகிறது. ஆனாலும் தொடர்ந்து பயன்படுத்தும் பொழுது பக்க விளைவுகள் அதிகமாக இருப்பதால் பூண்டுச் சாறு கலந்த மவுத்வாஷ் பிரபலமாகி வருகிறது.

இது வாயில் நீண்ட நேரம் இருந்து சுகாதார தேவைகளுக்கு உதவியாக இருக்கிறது. இது தொடர்பான சோதனைகளில் பாசி படர், உமிழ்நீர் பி.எச் (pH) அளவு ஆகியவற்றை பூண்டு பராமரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
ஈறு நோய்கள், பல் சொத்தை, வாய் துர்நாற்றம் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்கிறது. இவற்றிற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படும் பாக்டீரியா எண்ணிக்கையும் இந்த மருத்துவ சோதனையில் குறைப்பட்டுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |