காதலரை காட்டிய நிவேதா பெத்துராஜ்- எப்போது திருமணம், மாப்பிள்ளை என்ன செய்கிறார்?
பிரபல நடிகை நிவேதா பெத்துராஜ், அவருடைய காதலருடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சிக் கொடுத்துள்ளார்.
நிவேதா பெத்துராஜ்
தமிழ் சினிமாவில் இருக்கும் தமிழ் பேச தெரிந்த நடிகைகளில் ஒருவர் தான் நடிகை நிவேதா பெத்துராஜ்.
இவர், நெல்சன் வெங்கடேசன் இயக்கிய “ஒரு நாள் கூத்து” என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து நடிகர் தினேஷ், விஜய் சேதுபதி, உதயநிதி ஸ்டாலின், விஜய் ஆண்டனி ஆகிய நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.
நிவேதா நடித்த படங்கள் பெரியளவு வரவேற்பை பெறாத காரணத்தினால் அவருக்கு பெரியளவு பட வாய்ப்புக்களும் இல்லை. இருந்தாலும் நிவேதா பெத்துராஜ் தொடர்ந்து முயற்சித்து வருகிறார்.
வருங்கால கணவர் யார்?
இந்த நிலையில் கார் ரேஸ், டோலிவுட் படங்கள் என பிஸியாக இருக்கும் நிவேதா பெத்துராஜ் அவருடைய வருங்கால கணவரை அறிமுகப்படுத்தியுள்ளார்.
குறித்த நபரின் பெயர் ராஜ் ஹித் இப்ரான். துபாயை சேர்ந்த இவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இவர்களின் திருமணம் இந்த வருட கடைசியில் மிக எளிமையாக நடைப்பெற இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
துபாயில் தொழிலதிபராக இருக்கும் ராஜ் ஹித் இப்ரானுடன் நிவேதா ஜோடியாக எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இதனை பார்த்த ரசிகர்கள் தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றதுடன், “ திருமணம் எப்போது?” என்றும் விசாரித்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |