நிவாவுடன் காதல்? பிக்பாஸில் இருந்து வெளியே வந்த அசல் சொன்ன தகவல்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் வெளியேற்றப்பட்டிருக்கிறார் அசல் கோளாறு.
சூடுபிடித்த பிக்பாஸ் 6
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6, மற்ற சீசன்களை காட்டிலும் தொடக்கத்திலேயே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது.
போட்டியாளர்கள் ஒவ்வொரு டாஸ்கின் போது தங்களுடைய கருத்துகளை மிக சத்தமாகவும், அதேசமயம் ஆக்ரோஷமாகவும் கூட எடுத்து கூறுகின்றனர்.
இதுவே பல பிரச்சனைகளுக்கும், சர்ச்சைகளுக்கும் காரணமாகிறது, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபல பாடகரான அசல் கோளாறு பெண்களிடம் நடந்து கொண்ட விதம் சர்ச்சையை கிளப்பியது.
நிவாவுடன் காதலா?
குறிப்பாக நிவாவுடன் அவர் நெருங்கிய பழகிவந்தார், அசல் வெளியே வந்ததும், நிவாவும் சோகம் நிறைந்த முகத்துடன் சுற்றி வருகிறார்.
இந்நிலையில் அசல் அளித்துள்ள பேட்டியில், நான் பிக்பாஸில் நுழைந்தவுடனே அனைவருடனும் சகஜமாக பழகினேன், தொடக்கத்தில் நிவாவுடன் நான் பேசவில்லை.
இடையில் நடந்த டாஸ்கின் போது, நிவா என்னுடன் நட்பாக பழகவேண்டும் என தெரிவித்தார், அப்பறம் நாங்கள் பேசிய போது இருவருக்கும் Vibe செட் ஆனது.
மற்றவர்களிடம் பேசினாலும் அவர்களுடன் நிவாவுக்கு செட் ஆகவில்லை, ஒரு சிலர் நம்மிடம் ஒருமாதிரியும், மற்றவர்களிடம் வேறுமாதிரி பேசுவதும் நிவாவுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை, நான் அவளை புரிந்துகொண்டேன், அவளுக்கும் என்னை பிடித்திருந்ததால் நன்றாக பழகினாள்.
அவள் வெளியே வந்த பின்னர் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம், எங்களுக்கும் கொஞ்சம் நேரம் தேவைப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் இருவரும் காதலில் விழுந்துவிட்டனரா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.