கைலாசாவில் இது இருக்கு.. கொரோனா 3வது அலையில் தப்பிக்க.. நித்தியானந்தாவின் அடுத்த வீடியோ!
பாலியல் புகார் குற்றச்சாட்டில் சிக்கி நாட்டை விட்டு தப்பிச்சென்றவர் சாமியார் நித்யானந்தா. இவர் வாங்கிய தனித்தீவில் ஒரு நாட்டை உருவாக்கிவிட்டதாக சொல்லிக்கொள்கிறார்.
அந்த நாட்டிற்கு கைலாசா என்று பெயர் வைத்தாக நித்யானந்தாவே கூறியிருந்தார். மேலும், அந்நாட்டில் நாண்யங்கள் அச்சடிப்பு மற்றும் அங்கு வாழும் வாழ்க்கையை பற்றி அவரது முகநூல் பதிவில் தெரிவித்து வந்தார்.
ஆனால், கைலாசா நாடு எங்கிருக்கிறது என்பது இதுவரை யாருக்கும் தெரியாத ரகசியமாக உள்ளது. அமெரிக்காவின் கடல்பகுதியில் உள்ள ஏதே ஒரு தீவில் கைலாசா நாட்டை நித்யானந்தா உருவாக்கினாரா? இல்லை இந்தியாவிலேயே இருந்துகொண்டே பேசுகிறாரா என்பது தெரியவில்லை..
மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு நித்யானந்தா வெளியிட்ட வீடியோவில், தன்னுடைய கால் இந்தியாவில் பட்டால் தான் கொரோனா இந்தியாவை விட்டு போகும் எனவும், கொரோனாவின் 3-வது அலை புரட்டாசி மாதம் தாக்க உள்ளதாகவும் கூறி இருந்தார்.
இந்நிலையில் தற்போது அவர் பேசிய புதிய வீடியோவில் பேசியுள்ளார், அதில் இந்தியாவில் மக்கள் சுதந்திரமாக நடமாடுவதும், கூட்டமாக செல்வதையும் பார்க்கும்போது அவர்கள் கொரோனா 3-ம் அலையை வரவேற்பது போல உள்ளது.
டெல்டா பிளஸ், லம்டா வைரஸ்கள் மிகவும் மோசமானவை. இந்த வைரஸ்கள் கொரோனாவின் அப்டேட் வெர்சனாக வந்துள்ளது. 3-ம் அலை மோசமானதாக இருக்கும்.
மேலும், கொரோனா, மருத்துவ உள்கட்டமைப்பை அதிகமாக பாதித்துள்ளது. இதனால் மருத்துவ துறை மட்டுமல்ல சமூக உள்கட்டமைப்பு, நிர்வாக கட்டமைப்பு என அனைத்தும் பாதிக்கப்படுகிறது.
எனவே நான் எனது பக்தர்களுக்கு எச்சரிக்கையாக சொல்கிறேன். வீட்டிலேயே இருங்கள். பாதுகாப்பாக இருங்கள். இல்லையென்றால் ஆதி கைலாசாவுக்கு வந்து விடுங்கள். இங்கு தான் மல்டி லேயர் குவாரண்டைன் வசதி உள்ளது.
ஆசிய கண்டத்தில் உள்ள நாடுகளில் சமூக கட்டமைப்பு சரியாக இல்லை. இங்கு மக்கள் கூட்டமாக செல்கிறார்கள். மற்றவர்களை தொட்டு பேசுகிறார்கள். தொற்று நோயை தடுப்பதில் இந்தியாவில் சமூக உள்கட்டமைப்பு தோற்று போய் உள்ளது.
மேலும், மக்கள் கூட்டம், கூட்டமாக செல்கிறார்கள். குடும்பத்தோடு ஷாப்பிங் செல்கிறார்கள். லக்சரி கடைகளுக்கு செல்கிறார்கள். தி.நகர் ரங்கநாதன் தெருவில் கூட்டத்தை பார்த்தால் கொரோனாவே இறந்து விடும் போல் உள்ளது. என சிரித்துகொண்டே பேசுகிறார்.
3-வது அலையில் உயிரிழப்புகள் மிகவும் அதிகமாக இருக்கும். பாதிப்பும் கடுமையாக இருக்கும். எனவே மல்டி லேயர் குவாரண்டைன் மட்டுமே உங்களை காக்கும்.
நான் எனது பக்தர்களுக்கும், சன்னியாசிகளுக்கும், பிரம்மசாரிகளுக்கும் சொல்கிறேன். உங்களுக்கு குடும்பத்தினர் அல்லது நீங்கள் மிகவும் நேசிப்பவர்களை ஆதி கைலாசாவுக்கு அழைத்து சென்று விடுங்கள் என தெரிவித்துள்ளார்.