நித்தியானந்தா இறந்துவிட்டாரா? எலும்பும் தோலுமாக வெளியான புகைப்படம்! உண்மை நிலை என்ன?
கைலாசா என்னும் மர்ம தீவில் பதுங்கி இருக்கும் நித்தியானந்தா இறந்து விட்டதாக தகவல் வெளியான நிலையில், இந்த வதந்திக்கு நித்தியானந்தா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
நித்தியானந்தா
தமிழ்நாட்டில் சர்ச்சைக்கு பிரபலமான நித்தியானந்தாவின் மீது சிறுமி கடத்தல், பாலியல் புகார்கள் என இருக்கும் நிலையில் தலைமறைவாக இருந்து வருகின்றார்.
சில வருடங்களுக்கு முன்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு பின்பு வெளிவந்த இவர் மீது இப்போது வரை ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் இருக்கிறது.
இந்நிலையில் நித்தியானந்தா திடீரென ஒரு தீவை வாங்கி அதற்கு கைலாச நாடு என்று பெயரிட்டு ஊடகங்களுக்கு அறிவித்ததோடு, அங்கிருந்து புகைப்படங்கள் காணொளிகள் என அவ்வப்போது வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில் நித்யானந்தா உடல்நல குறைவு காரணமாக மறைந்துவிட்டதாக சமூக ஊடகங்களில் ஒரு செய்தி பரவி வந்தது. சில காலம் வரை இவரை பற்றி எந்தவித செய்தியும் இல்லாமல் இருந்து வந்த மீடியாவில் தற்போது இந்த தகவல் வைரலாக பரவியது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஆல்யாவா? இவர் கல்லூரியில் எத்தனை அரியர் தெரியுமா?
எலும்பும் தோலுமாக நித்தியானந்தா
இந்நிலையில் நித்தியானந்தா நான் சாகவில்லை என்று விளக்கம் கொடுத்துள்ளதோடு, தனது உடல் முன்பு போல் இல்லாமல் எலும்பும் தோலுமாக காட்சியளிக்கிறது.
மேலும் அவர் எனக்கு இருபத்தி ஏழு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கிறார்கள். அதிலிருந்து நான் இன்னும் வெளியே வர முடியவில்லை. பிரபஞ்சத்தின் சக்தியை என் உடல் உள் வாங்கிக் கொண்டிருக்கிறது.
மேலும் என்னால் சரியாக உணவு உண்ண முடியவில்லை தூங்க முடியவில்லை என் உடலுக்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை.
எனக்கு தெரிந்தவர்களையும், பழைய விஷயங்களையும் கூட என்னால் நினைவில் வைத்துக்கொள்ள முடியவில்லை. அவர்களை கண்டறிவதில் நான் சிரமப்படுகிறேன். ஆனால் நான் சாகவில்லை, சமாதி நிலையில் இருக்கிறேன். விரைவில் பூரண நலம் பெற்று திரும்புவேன். என்று கூறியுள்ளதோடு, இந்த சூழ்நிலையிலும் நித்திய பூஜை மட்டும் தொடர்ந்து வருகின்றது என்று கூறியுள்ளார்.