பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஆல்யாவா? இவர் கல்லூரியில் எத்தனை அரியர் தெரியுமா?
கல்லூரி வாழ்க்கை குறித்து ரசிகரின் கேள்விக்கு நடிகை ஆல்யா மானசா அளித்துள்ள பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை ஆல்யா
சின்னத்திரையில் பிரபலமான ஆல்யா மானசா ராஜா ராணி சீரியலில் நடிக்கும் போது, நடிகர் சஞ்சீவ் என்பவரை காதலித்து கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இந்த காதல் ஜோடிக்கு, ஏற்கனவே ஐலா என்ற மகள் இருக்கும் நிலையில், இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு அர்ஷ் என பெயரிட்டுள்ளனர்.
இரண்டாவது குழந்தை பிறந்த பின்பு சீரியலிலிருந்து விலகிய ஆல்யாவிற்கு பதிலாக ரியா என்பவர் சந்தியா வேடத்தில் ராஜா ராணி சீரியலில் நடித்து வருகின்றார்.
திருமணமான ஒரே மாதத்தில் புதுப்பெண் தற்கொலை! கழிவறையால் ஏற்பட்ட துயரம்
ரசிகரின் கேள்விக்கு பதில்
தற்சமயம் 2 குழந்தைகள், கணவர், மாமியார் என குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்கும் ஆல்யா அவ்வப்போது இன்ஸ்டாவில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் கூறி வருகிறார்.
இந்நிலையில் கல்லூரியில் எடுத்த மதிப்பெண்கள் குறித்து ஆல்யாவிடம் கேட்கப்பட்ட போது, கல்லூரியில் ஆல்யா 17 அரியர் வைத்ததாகவும், அதுமட்டுமில்லை பாதியிலே கல்லூரி படிப்பை நிறுத்தி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இப்போது நடப்பதை நினைத்து கவலைப்படாதீர்கள். உங்களுக்கு பிடித்ததை தொடர்ந்து செய்து அதன் வழியே செல்லுங்கள் நாளை வாழ்க்கை மாறும் எனவும் கூறியுள்ளார்.
மேலும் ரசிகர்களுடன் உரையாடிய போது, இன்னும் சில மாதங்களில் சீரியலில் நடிக்க வருவேன் என்றும் கூறியுள்ளார் ஆல்யா. பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையாக நடிக்கபோவதாக தகவல் வெளியாகியுள்ளது.