துபாய் சென்ற அம்பானி குடும்பம்: நீத்தா அம்பானியின் எளிமையான உடையின் ரகசியம் என்ன?
நீத்தா அம்பானி துபாயில் ஒரு புதுப்பாணியான சில்க் கோ-ஆர்ட் அமைப்பில் ஆடை அணிந்திருந்ததுடன் ஆனந்த் மற்றும் முகேஷ் அம்பானி சாதாரணமான புதுவித ஆடையை அணிந்திரந்தனர்.
நீத்தா அம்பானி
பொதுவாக அம்பானி குடும்பம் எந்த ஒரு இடத்திற்கு சென்றாலும் எந்த ஒரு பண்டிகை என்றாலும் ஆடம்பரமாக ஆடை அணிவார்கள். அது அனைவரும் அறிந்தது. அவர்களின் நகைகள் பாதணிகள் என அனைத்தும் சாதாரணமாக இருக்காது.
ஆனால் தற்போது இவர்கள் துபாய் சென்றுள்ளனர். அங்கு அவர்கள் அணிந்திருந்த ஆடைகள் மிகவும் வித்தியாசமாகவும் எளிமையாகவும் புதுவிதமாகவும் இருந்தது.
நீத்தா அம்பானி அணிந்திருந்த உடையில் பட்டு அகலமான கால் பேன்ட் மற்றும் எலாஸ்டிக் செய்யப்பட்ட இடுப்புப் பட்டை மற்றும் கையளவு பக்கவாட்டு தையல் பாக்கெட்டுகள் மஞ்சள், இளஞ்சிவப்பு மற்றும் பச்சை நிறங்களில் துடிப்பான மலர் அச்சிட்டுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
கிளாசிக் காலர் மற்றும் பட்டன்-டவுன் முன்பக்கத்தைக் கொண்ட பொருத்தமான நீண்ட கை சட்டையுடன் அந்த உடை வடிவமைக்கப்பட்டு இருந்தது. மேலும் அவர் டயமண்ட் ஸ்டட் காதணிகளை அணிந்திருந்தார்.
இந்த உடையின் விலை தோராயமாக ₹ 44,163 மற்றும் பேன்ட் $625 சுமார் ₹ 51,187 ஆகும். இவை அனைத்தையும் வைத்து பார்க்கும் போது இவரின் மொத்த உடை 1 லட்சம் பெறுமதி கொண்டதாகும். நீதா அம்பானியின் எளிமையான உடையே கிட்ட தட்ட 1 லட்சம் மதிப்புடையது என்பது கறிப்பிட தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |