நீதா அம்பானியின் ஹேண்ட் பேக் இத்தனை கோடியா? 60 வயதிலும் அழகைப் பாருங்க
உலக பணக்காரர்களில் ஒருவராக முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி பயன்படுத்தும் ஹேண்ட் பேக்கின் விலை தற்போது வெளியாகியுள்ளது.
முகேஷ் அம்பானி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி. இவரது மனைவி நீதா அம்பானி(59). இவர் உலகத்தின் விலை உயர்ந்த பொருட்களை வைத்திருக்கும் நிலையில், அந்த பொருட்களின் விலை சாமானிய மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றது.
தற்போது 59 வயதாகும் இவர் புதிய பேஷன் ட்ரெண்டுகளில் தன்னை ஈடுபடுத்தி அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி கொடுத்து வருகின்றார். இந்நிலையில் இவர் பயன்படுத்தும் ஹேண்ட் பேக் விலை தற்போது தெரியவந்துள்ளது.
அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றிற்கு வித்தியாசமான ஹேண்ட் பேக்குடன் வந்தார் நீதா அம்பானி. Faubourg Birkin 20 ஒயிட் மேட் என்ற ஹேண்ட் பேக்கை தான் வையில் வைத்திருந்தார்.
இதன் விலை 4 லட்சம் அமெரிக்க டொலர் என்பது தெரியவந்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.3.2 கோடியாகும்.
சில தினங்களுக்கு முன்பு பாலிவுட் நட்சத்திரங்களுடன் வெளியிட்ட புகைப்படத்தில் இவர் வைத்திருந்த ஹேண்ட் பேக்கில் வைரம் மற்றும் ரத்தினங்கள் பதிக்கப்பட்டுள்ள நிலையில், வைர கற்கள் மட்டும் 240 பதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
ஆக மொத்தம் இவர் வைத்திருக்கும் ஒரே ஒரு ஹேண்ட் பேக் இந்தியாவில் ஒரு பங்களாவே வாங்கிவிட முடியும் என்று மக்கள் வாயடைத்துப் போயுள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |