விரைவில் தொடங்கவிருக்கும் எதிர்நீச்சல் 2- ஆனால் பிரபலத்தின் முடிவால் அதிர்ச்சியில் ரசிகர்கள்
எதிர்நீச்சல் சீரியலில் இரண்டாம் பாகத்தில் நான் நடிக்க மாட்டேன் நடிகை பகிர்ந்த அறிக்கை ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
எதிர்நீச்சல்
பிரபல தொலைக்காட்சியில் இயக்குநர் திருச்செல்வம் இயக்கத்தில் கோலங்கள் தொடருக்கு பிறகு ஒளிபரப்பாகி வந்த தொடர் தான் எதிர்நீச்சல்.
கடந்த 2022ம் ஆண்டு ஜனனி, ஈஸ்வரி, நந்தினி, ரேணுகா என்ற 4 பெண்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு ஒளிபரப்பான இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் பலமாக வரவேற்கப்பட்டது.
அந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய மற்ற சீரியல்களை விட இந்த சீரியல் டிஆர்பியில் டாப்பில் எல்லாம் வந்தது, ஆனால் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்துவந்த மாரிமுத்து அவர்களின் இறப்பிற்கு பிறகு கதையில் கொஞ்சம் மாற்றத்தை ஏற்படுத்தியது.
தொடர்ந்து, வேறு நடிகர் ஒருவரை வைத்து கதை நகர்ந்தாலும் மக்கள் மத்தியில் பெரியதாக ரீச்சாகவில்லை. இதனால் திடீரென 2024 கடந்த ஜுன் மாதம் தொடரை முடிவுக்கு கொண்டு வந்தார்கள்.
திடீரென வெளியான மறுப்பு அறிக்கை
இந்த நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் இரண்டாம் பாகம் எப்போது வரும் என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
அந்த சமயம் பார்த்து பதிலளிக்கும் விதமாக, முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஜனனி (மதுமிதா), “ எதிர்நீச்சல் சீரியல் 2வது சீசனில் என்னால் நடிக்க முடியாது. மாறாக நான் வேறொரு விஷயத்தை தொடங்கியிருக்கிறேன்..” அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்த அறிக்கை ரசிகர்களுக்கு பேரிடியாக இருந்தாலும் எதிர்நீச்சல் 2 சீரியலை பார்க்க ஆர்வம் காட்டி வருகின்றார்கள்.
குறித்த செய்தி வலைத்தளங்களில் பரவலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |