நிரூப் யாஷிகாவை விவாகரத்து செய்தாரா? ரசிகர் கேட்ட கேள்விக்கு உண்மையை உடைத்த நிரூப்
பிக்பாஸ் மூலம் பிரபலமடைந்த நிரூப் யாஷிகாவை விவாகரத்து செய்தாரா என்ற கேள்வி ரசிகர் மூலம் எழுந்துள்ளது.
பிரபல ரிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிரூப் ஐந்தாவது இடத்தினை பிடித்தார். இந்த சீசனில் வெற்றியாளராக ராஜு மக்களால் தெரிவு செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சி தொடங்குகிறது. இந்த நிகழ்ச்சியில் முந்தைய சீசன் போட்டியாளர்கள் பங்கேற்கவிருக்கிறார்கள்.
இந்நிலையில் நேரலையில் ரசிகர்களிடம் பேசிய நிரூப்பிடம் அவரது காதலைக் குறித்து கேட்டுள்ளனர். அதற்கு பதில் அளித்த நிரூப், “என் காதலை பற்றி கேட்கிறீர்கள? என் காதலை பற்றி சொல்ல வேண்டும் என்றால் நிறைய சம்பவங்கள் நடந்திருக்கு.
எனக்கு இந்த அரேஞ்ச் மேரேஜ்ல எல்லாம் நம்பிக்கை இருந்ததில்லை. சில காரணங்களும் அதில் இருக்கின்றன.
இதனை கேட்டவுடன், ரசிகர் ஒருவர், “அப்புறம் ஏன் யாஷிகாவை டைவர்ஸ் செய்தீர்கள்?” என்று கேட்க ஒரு நிமிடம் ஷாக்காகிய நிரூப், சிரித்துவிட்டு “டிவோர்ஸ் பண்ணேனா? டிவோர்ஸ்லாம் பண்ணலங்க, எங்களுக்குள் வேறுபாடுகள் இருந்தன.
ஒரு கட்டத்துக்கு மேல் பிரியாமல் இருந்தால், ஒன்று நாம் கஷ்டப்படுவோம், இல்லை என்றால் கூட இருப்பவர்கள் கஷ்டப்படுவார்கள்!” என்று தனது காதல் தோல்வி குறித்து பேசியுள்ளார்.