யாருக்கும் அடங்காத நிரூப்... அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்த பாவனி!
பிக் பாஸில் 40வது நாளான இன்று லிவ்விங் ஏரியாவிற்குள் பவானியின் அனுமதி பெறாமல் வந்ததற்காக நிரூப்பிற்கு 40 முறை தோப்புக்கரணம் போடும் தண்டனை வழங்கப்பட்டது.
தோப்புக்கரணம் போட்டுவிட்டு மீண்டும் விதியை மீறினார் நிரூப். இதனால் மற்ற போட்டியாளர்கள், நிரூப்பிற்கு ஒரு ரூல் எங்களுக்கு ஒரு ரூலா என்று பாவனியிடம் கேள்வி கேட்டனர்.
இதனால் மீண்டும் நிரூப்பிற்கு நூறு முறை லிவ்விங் ஏரியாவை சுற்றி வரும்படி தண்டனை அளித்தார். அந்த தண்டனையை ஏற்க மறுத்த நிரூப், 40 முறை தோப்புக்கரணம் போட்டு விட்டேன் மீண்டும் இந்த தண்டனையை ஏற்க முடியாது என்று வாக்குவாதம் செய்தார்.
மற்ற போட்டியாளர்கள் எவ்வளவோ எடுத்துக்கூறியும் நிரூப் கேட்காமல் அவர் இஸ்டத்திற்கு இருந்தார்.
இதனால் கோபமடைந்த பாவனி பெடஸ்டரிலிருந்து நாணயத்தை எடுத்துவிட்டு யாரும் என் பேச்சைக் கேட்பதில்லை இதனால் அனைவருக்கும் இன்று தண்டனை என்று கூறி இன்னைக்கு புல் டே காயினை வைக்க மாட்டேன் என்று கூறினார்.
மதுமிதா, அக்ஷரா அனைவரும் பவானி கொடுத்த தண்டனை ஏற்றுக்கொண்ட நிலையில், நிரூப் மட்டும் இப்படி ரூலை மதிக்காமல் இருப்பதால் மற்ற போட்டியாளர்கள் கடுப்பானார்கள்.
பவானி கடந்த வாரம் நான் யார் என்பதை காட்டுகிறேன் என்று கூறி இருந்தார்.
ஆனால், அவரின் பேச்சை கேட்காமல் நிரூப் ஒவரா பேசுவதால் குரலை உயர்த்தி கத்தி, இது என் இடம் நான் சொல்வதைத்தான் செய்ய வேண்டும் என்று நிரூப்கை ஒரு அதட்டு அதட்டினார்.
இதையடுத்து, நிரூப் நான் ரூல் பிரேக் பண்ணமாட்டேன் என்று கத்திக்கொண்டே லிவிங் ஏரியாவை ஒரு சுற்று சுற்றி வந்தார்.