பூரி, சப்பாத்திக்கு என்ன காம்பினேஷன் கொடுப்பது-ன்னு தெரியலையா? அப்போ இந்த குருமா செய்து பாருங்க!
பொதுவாக வீடுகளில் இரவு நேரங்களில் சப்பாத்தி செய்வார்கள்.
இதற்கு என்ன காம்பினேஷன் கொடுப்பது என தெரியாமல் இருந்திருக்கும்.
இனி இந்த சந்தேகமே வேண்டாம் காய்கறிகளை வைத்து சூப்பரான நீலகிரி ஸ்டைல் குருமா செய்து சாப்பிடலாம்.
அந்த வகையில் நீலகிரி ஸ்டைல் குருமா எப்படி செய்வது என தெரிந்து கொள்வோம்.
பச்சை விழுதிற்கு பொருட்கள்
* ஏலக்காய் - 2
* கிராம்பு - 2
* சோம்பு - 1/4 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* புதினா - சிறிது
* பச்சை மிளகாய் - 5
* இஞ்சி - 1/2 இன்ச் (தோலுரித்து துண்டுகளாக்கவும்)
* பூண்டு - 5 பல்
* தண்ணீர் - 1/2 கப்
வெள்ளை விழுதிற்கு தேவையான பொருட்கள்
* கசகசா - 1 டேபிள் ஸ்பூன்
* முந்திரி - 15
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* தண்ணீர் - 1/2 கப்
பிற பொருட்கள்
* தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - 1 டீஸ்பூன்
* பச்சை பட்டாணி - 1/2 கப்
* உருளைக்கிழங்கு - 1/2 கப் (தோலுரித்து துண்டுகளாக்கப்பட்டது)
* கேரட் - 1/4 கப் (துண்டுகளாக்கப்பட்டது)
* பீன்ஸ் - 1/4 கப் (துண்டுகளாக்கப்பட்டது)
* காலிஃப்ளவர் - 1/2 கப் (துண்டுகளாக்கப்பட்டது)
* தயிர் - 1/2 கப்
* கொத்தமல்லி - சிறிது
குருமா செய்முறை
முதலில் ஒரு சுத்தமான மிக்ஸி சாரில் விழுதிற்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு அரைத்து கொள்ளவும்.
பின்பு அதில்,கசகசா மற்றும் முந்திரி ஆகியவற்றை ஊற வைத்து தேங்காய் சேர்த்து அரைத்து கொள்ளவும். மென்மையாக அரைத்து கொள்வது அவசியம்.
இதனை தொடர்ந்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் விட்டு அதில் சோம்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
அதனுடன் வெங்காயத்தை சேர்த்து கொள்ளவும். அரைத்து வைத்துள்ள பச்சை விழுதை உப்பு சேர்த்து வதங்க விடவும்.
அதில் காய்கறிகளை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, 1/2 கப் நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து குறைவான தீயில் வைத்து 10 நிமிடம் காய்கறிகளை வேக வைக்க வேண்டும்.
10 நிமிடங்களுக்கு பின்னர் தயிர் மற்றும் வெள்ளை விழுதை சேர்த்து தேவையானளவு நீர் சேர்த்து 5-6 நிமிடம் குருமாவை கொதிக்க வைத்து இறக்கினால் சுவையான நீலகிரி காய்கறி குருமா தயார்!
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |