பிரபல நடிகருடன் நிச்சயம் செய்தாரா? நடிகை நிக்கி கல்ராணி - திருமணம் எப்போது?
நடிகை நிக்கி கல்ராணிக்கும், நடிகர் ஆதிக்கும் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாக இணையத்தில் தகவல்கள் உலா வருகின்றன.
தமிழ் சினிமாவில், டார்லிங் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நிக்கி கல்ராணி. இப்படத்தின் மூலம் அவர் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தார்.
அதனைத்தொடர்ந்து, பல படங்களில் நடித்த நிக்கி மொட்டசிவா கெட்டசிவா, மரகத நாணயம் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.
ரகசிய திருமணமா?
இந்நிலையில், பிரபல நடிகரான ஆதியை காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது. ஆதி தமிழ் சினிமாவில் ஈரம் படத்தில் நடித்ததன் மூலம் பெருமளவில் பிரபலமானவர்.
அதுமட்டுமின்றி மரகத நாணயம், யாகாவாராயினும் நாகாக்க போன்ற படங்களில் நடிகை நிக்கி கல்ராணியுடன் இணைந்து நடித்துள்ளார்.
இதனிடையே, இருவரும் காதலிப்பதாகவும், அண்மையில் நிச்சயதார்த்தமே முடிந்து, திருமணம் நடைப்பெறப்போவதாகவும், தகவல்கள் கசிந்துள்ளனர்.
ஆனால் இதுவரை இதைப்பற்றி இருவரும் எந்தவித கருத்தும் கூறவில்லை...