இரவில் அரிசி சாதம் சாப்பிடலாமா? ஆபத்தை ஏற்படுத்துமா?
இரவில் நாம் உட்கொள்ளும் உணவுகள் நமது ஆரோக்கியத்தில் தொடர்பு உள்ள நிலையில், அதிக கவனம் செலுத்த வேண்டும்.
இரவில் அரிசி சாதம் சாப்பிடலாமா?
அரிசியை சாதமாக வடிப்பது எளிதான செயலாக இருந்தாலும், மக்கள் விரும்பி சாப்பிடும் உணவாகவும் இருக்கின்றது. அரிசியில் கார்போஹைட்ரேட் மட்டுமின்றி புரதம், கொழுப்பு, கால்சியம் இவைகளும் இருக்கின்றது.
அரிசி சாதம் சாப்பிட்டால் உடல் எடை அதிகரித்துவிடும் என்று கூறப்படும் நிலையில், பலரும் இரவு நேரங்களில் அரிசி சாதத்தை சாப்பிட தயங்குகின்றனர்.
ஆனால், இரவில் சாதம் சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கும் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.
அரிசியில் அதிகமான அளவு கார்போஹைட்ரேட் இருக்கும் நிலையில், இவை உடலுக்கு ஆற்றலையும், உற்சாகத்தையும் கொடுப்பதுடன், நமது பணிகளை முழு ஆற்றலுடன் செய்யவும் முடிகின்றது.
புழுங்கல் அரிசி எளிதில் ஜீரணமாகும் என்பதால், வயிற்றுப் பிரச்சினையை நீக்குவதுடன், எளிதில் ஜீரணமாகவும் செய்கின்றது.
ஆனால் உடல் எடை குறைக்க நினைப்பவர்கள், அதிக உடல் உழைப்பு இல்லாதவர்கள் குறைவாக உட்கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லையெனில் சாப்பிடுவதை தவிர்க்கவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |