இரவில் நகம் வெட்ட, துணி தைக்கக் கூடாது ஏன்? நஷ்டம் உங்களுக்குத்தான்
இந்து நம்பிக்கைகளின்படி, இரவில் சில வேலைகளை செய்யக்கூடாது என்று கூறுவதுண்டு. இதற்கு பின்னணியில் பல அறிவியல் காரணங்களும், ஆரோக்கியம் சார்ந்த காரணமும் இருக்கின்றது.
இரவில் செய்யக்கூடாத காரியம்
மாலை நேரத்தில் வீட்டின் தரையை துடைக்கக்கூடாது என்று கூறுவதை கேள்விபட்டிருப்போம். மாலையில் தரையை துடைப்பது தவறு இல்லை. ஆனால் குப்பைகளையே கொட்டக்கூடாது.
மின்சாரம் இல்லாத அந்தக் காலத்தில், குப்பையுடன் விலைமதிப்பற்ற பொருட்களையும் அள்ளி போட்டுவிட வாய்ப்பு இருந்தது. அதனால் மகா லட்சுமி செல்வார் என்று கூறப்பட்டது. மேலும், குப்பைகளை வீசுவதற்கு முன்பு பார்க்க வேண்டும்.
இதே போன்று இரவில் நகம் வெட்டக்கூடாது என்றும் சொல்வதுண்டு. இதற்கு காரணம் மின்சாரம் இல்லாத அந்த காலத்தில் நாம் வெட்டும் நகம் உணவுக்குள் விழுந்துவிட்டால், அது பாரிய பிரச்சினையை ஏற்படுத்தும்.
மேலும் நகவெட்டி இல்லாததால் கத்தி, அரிவாள் இவற்றினை கொண்டு நகம் வெட்டியதால், தவறாக கையில் காயம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே இவ்வாறு கூறப்பட்டது.
இரவில் துணி தைக்கக் கூடாது என்று கூறுவது, ஊசிகள் மற்றும் கூர்மையான பொருட்களைப் பயன்படுத்தி தையல் செய்வதும் இரவில் மின்சாரம் இல்லாமல் இருண்ட வாழ்க்கைக்கு ஏற்றதல்ல. இதனால் ஆபத்து ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன.