உடல் எடையைக் குறைக்க உங்களுக்கு ஒரு சீக்ரெட்... இதை செய்தால் தானாக எடை குறையுமாம்
எடையைக் குறைப்பதற்கு பல முயற்சிகள் செய்துவரும் நீங்கள், இந்த ஒரு செயலின் மூலம் 270 கலோரிகளை இயற்கையாகவே குறைக்க முடியுமாம்.
அதிகரிக்கும் உடல் எடை
இன்றைய காலத்தில் பெரும்பாலான நபர்களின் பிரச்சனை என்னவெனில் உடல் எடை அதிகரித்து காணப்படுவது. எடை அதிகரித்த பின்பு அதனை குறைப்பதற்கு பல முயற்சி செய்கின்றனர்.
சிலர் உடற்பயிற்சியில் கவனம் செலுத்துகின்றனர். சிலரோ உணவில் கட்டுப்பாடு வைக்கின்றனர். இன்னும் சிலர் இதற்காக மருந்துகளையும் உட்கொள்கின்றனர்.
ஆனால் நாம் அன்றாடம் செய்யும் செயல் இயற்கையாகவே 270 கலோரிகளை நிச்சயம் குறைக்கின்றது.

தூக்கம் சிறந்த வழியா?
நம்மில் பெரும்பாலான நபர்கள் தூக்கம் வெறும் ஓய்வு என்று தான் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் தூக்கம் ஓய்வு மட்டுமின்றி ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
அதாவது 7 மணி நேரம் உறக்கம் கட்டாயம் தேவை. இவை உடம்பிலுள்ள சிதைந்த திசுக்களை சீரமைக்கின்றது.
முறையான தூக்கம் இல்லையெனில், இந்த சீரமைப்பு பணிகள் தடை ஏற்படுவதுடன், தூக்கம் இல்லாமல் மனநிலை மாற்றமும், உடல் பிரச்சனையும் ஏற்படுகின்றது.

வெறும் 5 மணி நேரம் மட்டும் தூங்குபவர்களுக்கு, 48 நேரம் தூங்காமல் இருப்பவர்களுக்கு உடல் சோர்வு ஏற்படுதாக ஆய்வு கூறுகின்றது.
ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பது போன்று தூக்கத்திற்கு அதிக முக்கியம் கொடுக்க வேண்டும். தூக்கத்தினால் நீண்டகால நோய்களை நிச்சயம் தவிர்க்க முடியும்.
அதுமட்டுமின்றி 7 முதல் 8 மணி நேரம் தூங்குவது இயற்கையாகவே 270 கலோரிகள் குறைகின்றது. எடை குறைவதற்கு கலோரி எரிப்பு மிக அவசியம்.

தூக்கம் இல்லையெனில் பசி இருந்து கொண்டிருப்பதால் அதிகமாக சாப்பிடுதாலும், ஹார்மோன் அதிகரிப்பினாலும் உடல் எடை அதிகரிக்கின்றது. 6 மணி நேரத்திற்கு குறைவாக தூங்குபவர்கள் மற்றும் 7 முதல் 8 மணி நேரம் தூங்குபவர்கள் இடையே நடத்தப்பட்ட ஆய்வில் இந்த உண்மை கண்டறியப்பட்டுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |