இரவில் கண்விழித்து வேலை செய்பவரா நீங்கள்? இந்த உடல்நல பாதிப்பு ஏற்படுமாம்
இரவில் பணிபுரியும் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இன்றைய காலத்தில் பகல் நேரத்தில் வேலை செய்வது போன்று இரவு நேரங்களில் தொடர்ந்து வேலை செய்து வருகின்றனர்.
இதில் ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் இரவு நேர பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு பணியை தொடர்ச்சியாக செய்வதால் உடலில் சில மாற்றங்களும், பக்கவிளைவுகளும் ஏற்படுமாம்.
பாதிப்புகள் என்ன?
நம் உடலின் தூக்க-விழிப்புச் சுழற்சி சூரிய ஒளியைச் சார்ந்துள்ளது. பகலில் கார்டிசோல் அதிகரித்து விழிப்புணர்வையும், இரவில் மெலடோனின் தூக்கத்தையும் தூண்டும்.
பெண்கள் இரவுப் பணியில் ஈடுபடும்போது, இந்தச் சுழற்சி சீர்குலைந்து, கார்டிசோல் அதிகரித்து மெலடோனின் உற்பத்தி குறைகிறது.
இவை மன அழுத்தம், ஆஸ்துமா, உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, சுவாசக் கோளாறுகள் போன்ற நோய்களுக்கு வழிவகுக்கும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இரவுப் பணி இயற்கையான தூக்கச் சுழற்சியைக் கடுமையாகப் பாதித்து, ஹார்மோன் சமநிலையின்மைக்கு வழிவகுக்கும்.
உடல் உயிரியல் கடிகாரத்தின்படி இரவு-பகல் சுழற்சிக்கு ஏற்ப இயங்குவதால், இந்தச் சீர்குலைவு பல உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |