தூங்காமல் நைட் ஷிஃப்ட் பார்ப்பவரா நீங்கள்? இந்த டிப்ஸ் உங்களுக்கே
மனித இனம் தோன்றிய காலம் முதல் தற்போது வரை மனிதர்கள் இயற்கையைச் சார்ந்து தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
நாம் விடும் மூச்சுக்காற்று, தண்ணீர், வெப்பம் உணவு உள்பட அனைத்தும் இயற்கையில் இருந்து தான் நமக்குக் கிடைக்கின்றன.
ஆனால் நாகரிகமும், தொழில்நுட்பமும் வளர்ச்சி அடைந்ததும், மனிதர்களாகிய நாம் இயற்கையை எதிர்த்து வாழ முயற்சி செய்து வருகிறோம்.
நமது உடலமைப்பின்படி, இரவு பத்து மணிக்கு முன்னதாக நிச்சயம் தூங்கிவிட வேண்டும். ஏனெனில், சூரியன் உதிக்கும்போது உள்ள வெப்பத்தில், நமது உடலில் சில ஹார்மோன்கள் சுரக்கும்.
குஞ்சுகளை தூக்க வந்த காகத்தை கொலை செய்த கோழி: பயங்கர திரில் காட்சி
அதேபோல் இரவு நேரத்தில் சில ஹார்மோன்கள் நமது உடலில் சுரக்கும். இது மனிதன் வளர்ச்சி அடைந்த சுமார் 40 லட்சம் ஆண்டுகளாக நமது உடலில் நடைபெற்று வரும் இயற்கையான சுழற்சி ஆகும்.
முக்கியமாக, மெலோட்டலின் என்கிற ஹார்மோன் இரவில் தூங்கும்போது மட்டும், அதுவும் அறையில் வெளிச்சம் இல்லாமல் தூங்கும்போது மட்டுமே சுரக்கும்.
இரவு பணிக்குச் சென்றுவிட்டு பகலில் தூங்குபவர்களின் உயிரியல் கடிகாரம் மாறுபடுவதால் தூக்கக் குறைபாடுகள் ஏற்படலாம். அலுவலகம், வீடு இரண்டிலும் உங்கள் செயல்பாடுகளைச் சரியாக நிர்வகிக்க என்ன செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
ஹெலிகாப்டரில் தப்பிச் சென்ற எம்.பி. குடும்பம்! இலங்கையில் தொடரும் பதட்டநிலை
இரவு நேர வேலை பார்ப்பவர்கள் செய்ய வேண்டியவை
- இரவுப் பணியின் போது வேலையை மெதுவாகத் தொடங்கி படிப்படியாக வேகத்தை அதிகரிக்க வேண்டும்.
- வேலை பார்க்கும் இடம் வெளிச்சமாக இருக்கும் வகையில் பிரகாசமான விளக்குகளைப் பயன்படுத்துங்கள்.
- இரவுப் பணி முடிந்து, வீட்டில் பகலில் தூங்கும் போது அந்த அறை இருட்டாக இருக்க வேண்டும்.
- வேலைக்குச் செல்லும் முன்பு 20 அல்லது 30 நிமிடங்கள் ஒரு குட்டித்தூக்கம் போட்டுவிட்டுக் கிளம்புவது அதிக புத்துணர்ச்சியைக் கொடுக்கும்.
- இரவுப் பணி முடிந்து வீட்டுக்குச் செல்லும் போது வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டும். பொதுப் போக்குவரத்து அல்லது அலுவலக வாகனங்களைப் பயன்படுத்துங்கள்.
- வாராந்திர விடுமுறை அன்றும் பணிக்குச் செல்லும் போது பின்பற்றிய அதே கால அட்டவணையைப் பின்பற்றுங்கள்.