ஹெலிகாப்டரில் தப்பிச் சென்ற எம்.பி. குடும்பம்! இலங்கையில் தொடரும் பதட்டநிலை
இலங்கை எம்.பி.நாமல் ராஜபக்சவின் மனைவி மற்றும் மகன் ஹெலிகாப்டரில் தப்பிச் செல்லும் காணொளி காட்சி வெளியாகியுள்ளது.
இலங்கையில் பொருளாதார சூழ்நிலை மிகவும் மோசமானதையடுத்து, மக்கள் கொந்தளிப்பில் அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே இருவரும் பதவி விலகக் கோரி, ஒரு மாதத்திற்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று அதிரடியாக பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். அவரது வீட்டை தீக்கிரையாக்கிய காட்சி இணையத்தில் வெளியாகியது.
இன்று காலை வீட்டை விட்டு வெளியேறி மகிந்தா வெளிநாடு தப்பிச் செல்லவுள்ளதாக தகவல் வெளியானதையடுத்து, காணொளி ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமல் ராஜபக்சவின் மனைவி லிமினி மற்றும் அவரது மகன் கேசரா ஆகியோர் இன்று காலை கொழும்பில் இருந்து திருகோணமலைக்கு தப்பிச் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இன்று அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை: வாங்குவதற்கு நல்ல சான்ஸை மிஸ் பண்ணிடாதீங்க
#BreakingNews
— ?? Sahan Dahanayake (@LiveSahan) May 10, 2022
Limini, wife of MP Namal Rajapaksa and her son Kesara are escaping Colombo to Trinco Navy base todays morning
නාමල්ගේ බිරිඳ ලිමිනි හා දරුවා ගුවන් හමුදා යානයකින් පලා යන අයුරු#lka #srilanka #breakingnews #gohomegota pic.twitter.com/pJkBuw31DF pic.twitter.com/MMRilrC60i