பிரபல நாட்டில்.. தடுப்பூசி செலுத்தாதவர்கள் இரவில் வெளியே வரக்கூடாது! வெளியான அதிரடி அறிவிப்பு
லெபனான் நாட்டில் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு இரவில் வெளியே நடமாட அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
கடந்த ஆண்டில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ்க்கு இன்று வரை ஒரு முடிவே இல்லாமல் உலக நாடுகளை ஈவு இரக்கமில்லாமல் தாக்கி வருகின்றது. இந்நிலையில் சீனாவை அடுத்து தென் ஆப்பிரிக்காவில் உருமாறிய புதிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய வகை வைரஸ்க்கு ஒமிக்ரான் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த உருமாறிய வைரஸ் கடந்த மாதம் 24ஆம் திகதி நிபுணர்களால் கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை ஒமிக்ரான் வைரஸ் சுமார் 23 நாடுகளில் பரவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் ஒரு சில நாடுகள் பயண கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். இந்நிலையில் லெபனான் நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு மட்டும் இரவு நேரங்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் பிராஸ் அபியாட் பிறப்பித்துள்ளார். சில நாட்களாகவே லெபனான் நாட்டில் கொரோனா அதிகரித்து வருகின்றது. இந்த உத்தரவு டிசம்பர் 17ஆம் திகதி முதல் ஜனவரி 9ஆம் திகதி வரை அமலில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.