இரவு தூக்கத்தில் எந்த தொந்தரவும் இருக்கக்கூடாதா? பாலில் இதை கலந்து குடிங்க
இரவு தூக்கம் என்பது மிகவும் முக்கியமானது. மறுநாள் எந்தவொரு உடல்பிரச்சினையும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் முதல்நாள் இரவு நன்றாக தூங்க வேண்டும்.
இரவில் தூங்குவதற்கு முன்பு குடிக்க வேண்டிய பானம்
கெமோமில் தேநீர் அமைதியான பண்புகளுக்கு பெயர்பெற்றதால் இதனை தூங்கும் முன்பு குடித்தால் பதட்டம் குறைவதுடன், தளர்வை ஊக்குவிக்கவும் உதவுகின்றது.
இயற்கையான மயக்கமருந்தாக இருக்கும் வலேரியன் வேர் ஆழ்ந்த நித்திரையை கொடுக்குமாம்.
மன அழுத்தத்தினை குறைக்கவும், அமைதியான உணர்வைத் தூண்டவும் பயன்படும் லாவெண்டர் தேநீரை எடுத்துக்கொள்ளவும்.
சூடான பாலில் ட்ரிப்டோபான் என்ற அமினோ அமிலம் உள்ளதால், இவை நல்ல தூக்கத்தை கொடுக்கும்.
மஞ்சள், பால், மற்றும் இலவங்கப்பட்டை மற்றும் கருப்பு மிளகு போன்ற மசாலாப் பொருட்களால் செய்யப்பட்ட சூடான பானம். மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன, அவை அமைதியின்மையை குறைக்க உதவும்.
செர்ரி சாறு மெலடோனின் இயற்கையான மூலமாகும், இது தூக்கம்-விழிப்பு சுழற்சிகளை ஒழுங்குபடுத்தும் ஹார்மோனான இவற்றை படுக்கைக்கு முன்பு உட்கொள்வது தூக்கத்தை மேம்படுத்துமாம்.
வெதுவெதுப்பான நீர், தேன் மற்றும் எலுமிச்சை ஆகியவற்றின் இனிமையான கலவையானது உங்கள் தொண்டையை தளர்த்தவும், நல்ல தூக்கத்தை கொடுக்கவும் உதவி செய்கின்றது.
வெதுவெதுப்பான நீரில் மெக்னீசியம் சப்ளிமெண்ட் சேர்ப்பது தசைகளை தளர்த்தவும், நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தவும், தூக்கத்தை மேம்படுத்தவும் உதவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |