சீனாவில் வவ்வாலிலிருந்து பரவும் புதிய வைரஸ்.. அதிர்ச்சி தகவல்
சீனாவின் வூகான் என்ற நகரில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகின் அனைத்து நாடுகளுக்கும் பரவி, கட்டுப்பாடு இல்லாமல் அடுத்தடுத்து அலைகளாக உருவெடுத்து வருகின்றது.
இதனால் மனித இனமே படிப்படியாக அழிந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது இந்த வைரஸில் இருந்து மனித இனத்தை காக்க மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் போராடி வருகின்றனர்.
தற்போது இதற்கான தடுப்பு ஊசிகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சீனாவில் இருந்து மீண்டும் ஒரு புதிய வகை வைரஸ் பரவி வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.
சீனாவில் உள்ள அதே வூகான் மாகாணத்திலுள்ள தாவரவியல் பூங்காவில் உள்ள வெளவால்களிடம் இருந்து 24 வகையான புதிய வகை வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா போன்று சீனாவில் உள்ள இந்த வெளவால் இனத்தின் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மனித இனத்திற்கு பரவ வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
குறிப்பாக ரினோ லோபஸ் பசில்ஸ் என்று கூறப்படும் வைரஸ், தற்போதைய கொரோனாவுக்கு இணையாக இருப்பதாக கூறப்படுவதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.