தாலி கட்டுன கையோடு மணமேடையில் புதுமண தம்பதி செய்த வேலை! வைரலாகும் வீடியோ
இந்தியாவைப் பொறுத்தவரையில் திருமணம் என்பது சமூக, கலாச்சார ரீதியாக மிக முக்கியமானதொரு நிகழ்வு.
காலத்துக்கு ஏற்ப திருமண நிகழ்வின் போது பல்வேறு சடங்கு சம்பிரதாயங்கள் இடம்பெறுகின்றன.
ஆனால் தற்போது கொரோனா காலம் என்பதால், மிக சிம்பிளாக திருமண வைபங்கள் நடந்தேறி வருகின்றன.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் வீடியோ ஒன்று வைரலானது, அதில் அக்னி குண்டம் முன்பு அமர்ந்திருக்கும் மணமக்கள், மிக கூலாக பாட்டிலை வைத்து விளையாடுகிறார்கள்.
இந்த வீடியோவுக்கு பலரும் லைக்ஸ்களை குவிக்க, கமெண்டுகளை தெறிக்கவிட்டு வருகின்றனர். ஒருசிலரோ, பார்ப்பதற்கு மிகவும் அற்புதமாக இருக்கிறது, இரு நல்ல நண்பர்கள் திருமண பந்தத்தில் இணைந்தால் இப்படித்தான் நடக்கும் என்றெல்லாம் பதிவிட்டு வருகின்றனர்.
இது எப்போது, எங்கு நடந்தது என்ற விபரங்கள் தெரியவரவில்லை.