திருமணம் முடிந்த 2 நாளில் கரிக்கட்டையாக புதுப்பெண்! காதல் கணவனின் வெறிச்செயல்: பகீர் காரணம்
காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவியை திருமணம் முடிந்து இரண்டு நாளில் கணவனே கொலை செய்துள்ள சம்பவம் தமிழகத்தில் அரங்கேறியுள்ளது.
மதுரை மாவட்டம் அவனியாபுரம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் ஜோதிமணி. இவரும் சோழவந்தான் பகுதியை சேர்ந்த கிளாடிஸ் ராணியும்(20) காதலித்து வந்துள்ள நிலையில், கிளாடிஸ் கர்ப்பமாகியுள்ளார்.
இந்நிலையில் பெற்றோரிடம் கூறி இருவரும் கடந்த 2ம் திகதி திருமணம் செய்துள்ள நிலையில், 4ம் திகதி மனைவியை பெற்றோருக்கு தெரியாமல் வெளியே அழைத்துச் சென்றுள்ளார் ஜோதிமணி.
பின்பு வீடு திரும்பிய ஜோதிமணி மனைவியின் பெற்றோருடன் சேர்ந்து மனைவியை தேடி நாடகமாடியுள்ளார். பின்பு மகளைக் காணவில்லை என்று பெற்றோர்கள் பொலிசார் புகார் அளித்த நிலையில், முட்செடியில் எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில் கிளாடிஸ் என்பது தெரியவந்ததையடுத்து, பொலிசார் கணவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது தனது மனைவியை காதலித்தது உண்மை தான் என்றும் அவரது வயிற்றில் வளர்வது தனது குழந்தை இல்லை என்றும் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரத்தில் அவரை தனியே அழைத்துச் சென்று கழுத்தை நெரித்து கொலை செய்து பின்பு பெட்ரோல் ஊற்றி எரித்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.
தற்போது ஜோதிமணியை கைது செய்த பொலிசார் கூட்டாக கொலை செய்தாரா? என்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.