திட்டிய புதுமனைவி: யூடியூப்பைப் பார்த்து கணவர் செய்த மோசமான செயல்
வருமானம் குறைவாக இருப்பதாக மனைவி திட்டியதால், கணவர் ஒருவர் யூடியூப் காணொளியினை அவதானித்து குற்றத்தில் ஈடுபட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவின் புனேவில் நிக்தி பகுதியில் வசிக்கும் சவுரப் யாதவ்(20). இவர் ஒரு நிறுவனத்தில் உணவு விநியோக நிர்வாகியாக பணியாற்றி வந்த நிலையில் பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளார்.
திருமணமாகிய ஒருசில வாரங்களில் மனைவி வருமானம் போதவிலலை என்று திட்டியுள்ளார். இதனால் குறித்த கணவர் வீட்டுக்கு வீடு உணவு டெலிவரி செய்யும்போது பல பெண்களின் கழுத்திலிருந்த தங்க செயினை பறித்துவிட்டு சென்றுள்ளார்.
இந்நிலையில் கடந்த வாரம் இவர் இருசக்கரவாகனத்தில் சுற்றிக்கொண்டு வருவதை பார்த்து சந்தேகித்த பொலிசார், அவரைக் காவலில் எடுத்து விசாரித்துள்ளனர்.
அப்பொழுது யாதவிடம் பொலிசார் விசாரணை செய்த போது, தனது குற்றத்தினை ஒப்புக்கொண்டதோடு, புனேவில் 7 இடங்களில் இருந்து 121 கிராம் தங்க செயினை பறித்து சென்றது தெரியவந்துள்ளது.
இவர் இந்த தவறை செய்ய ஆரம்பிக்கும் முன்பு யூரியூபில் பல செயின் பறிப்பு காணொளியை அவதானித்து கற்றுக்கொண்டுள்ளதும் பொலிசாருக்கு தெரியவந்துள்ளது.