புத்தாண்டு ராசி பலன் 2023! குறி வைக்கும் கண்டச்சனி, அஷ்டமத்து சனி - இந்த 5 ராசிக்கும் காத்திருக்கும் அதிர்ஷ்டம்
புத்தாண்டு இன்றும் ஓரிரு வாரங்களில் பிறக்கப்போகிறது.
2023ஆம் ஆண்டில் ஜனவரி மாதமே சனிப்பெயர்ச்சி நிகழப்போகிறது.
குரு பெயர்ச்சி மே மாதமும் ராகு கேது பெயர்ச்சி அக்டோபர் மாதமும் நிகழப்போகிறது. இந்த கிரகங்களின் பெயர்ச்சியால் புதிய வருடத்தில் யாருக்கு அதிர்ஷ்டம் என்பதை பார்க்கலாம்.
புத்தாண்டு ராசி பலன் 2023
மேஷம்
லாப ஸ்தானத்தில் உங்கள் ராசி மீது சனி பகவான் பயணம் செய்யப்போகிறார். இதனால் அச்சங்கள் நீங்கி அற்புதங்கள் நிகழப்போகிறது. நல்ல வேலை கிடைக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். சின்னச் சின்ன தடுமாற்றங்கள் வரலாம் கவனம் தேவை
ரிஷபம்
தொழில் ஸ்தான அதிபதி சனி தொழில் ஸ்தானத்தில் அமர்கிறார். லாப ஸ்தானத்தில் பயணிக்கும் குரு உங்களுக்கு நல்ல வேலையையும், தொழில் வியாபாரத்தையும் தரப்போகிறார். சனிபகவான் சாதகமாக பயணம் செய்வதால் நல்ல வேலையை பெற்றுத்தருவார். சனிக்கிழமை நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.
மிதுனம்
2023ஆம் ஆண்டில் உங்களுக்கு நல்ல வேலை கிடைக்கப்போகிறது. அரசு வேலையில் அமர்வது நிச்சயம். அதற்கான சாதகமான நேரம் கைகூடி வரப்போகிறது.
கடகம்
கண்டச்சனியால் கஷ்டப்பட்ட உங்களுக்கு அஷ்டமத்து சனி வரப்போகிறது. கையில் உள்ள வேலையை தக்க வைத்துக்கொள்ளுங்கள். புதிய வேலைக்கு முயற்சி செய்தால் உள்ளதும் உங்களின் கையை விட்டு போய்விடும் கவனம்.
சிம்மம்
சனி கண்டச்சனியாக அமர்கிறார். வேலையில் புரமோசன் கிடைக்கும். எத்தனையோ சிரமங்களைக் கடந்து உயர் பதவிக்கு வந்திருப்பீர்கள் இந்த ஆண்டு உங்களுக்கு அற்புதமான ஆண்டாக அமையப்போகிறது. காரணம் குருவின் பார்வை மே மாதத்திற்குப் பிறகு கிடைப்பதால் வெற்றிகள் தேடி வரும்.
கன்னி
உங்களுக்கு 2023ஆம் ஆண்டு அற்புதமான ஆண்டாக அமைந்துள்ளது. குருவின் பார்வையால் நல்ல வேலை கிடைக்கும். சனி பகவானும் சாதகமாக இருப்பதால் உயரதிகாரிகளால் ஏற்பட்ட சிக்கல்கள் நீங்கும்.