ஒரு நாளில் இத்தனை ட்வீட் தான் பார்க்க முடியுமா! அப்டேட் கொடுத்த எலான் மஸ்க்
பயனர்கள் ஒரு நாளில் இத்தனை ட்வீட் தான் பார்க்க வேண்டும் என்று ட்விட்டர் நிறுவனம் கட்டுப்பாடு விதித்துள்ளது. இதற்கு, பயனர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இதுகுறித்து எலான் மஸ்க் கூறுகையில்,"AI ஸ்டார்ட் அப் போன்றவை மேற்கொள்ளும் தகவல் திருட்டு தான் இதற்கு முக்கிய காரணம்" என்று கூறியுள்ளார்.
தற்காலிகமாக வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பில், ட்விட்டர் பயனர்கள் இத்தனை ட்வீட் தான் பார்க்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கடந்த சனிக்கிழமை எலான் மஸ்க் வெளியிட்ட அறிவிப்பில்," வெரிஃபைடு பெற்றிருக்கும் ட்விட்டர் பயனர்கள் ஒரு நாளில் 6,000 பதிவுகளை பார்க்க முடியும். வெரிஃபைடு பெறாத பயனர்கள் நாள் ஒன்றுக்கு 600 பதிவுகளை மட்டுமே பார்க்க முடியும். வெரிஃபைடு இல்லாத புதிய பயனர்கள் நாள் ஒன்றுக்கு 300 பதிவுகளை பார்க்க முடியும்" என்று கூறியிருந்தார்.
மேலும் அவர், தகவல் திருட்டு & சிஸ்டம் கையாளுதலின் தீவிர நிலைகளைத் தீர்க்க, தற்காலிக வரம்புகளை பயன்படுத்தியுள்ளோம் என்று கூறியிருந்தார்.
இந்த அறிவிப்பை வெளியிட்டு 2 மணி நேரத்திற்கு பிறகு தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்ட அறிவிப்பில்," வெரிஃபைடு பெற்று இருக்கும் ட்விட்டர் பயனர்கள் ஒரு நாளில் 8,000 பதிவுகளையும், வெரிஃபைடு பெறாத பயனர்கள் 800 பதிவுகளையும், வெரிஃபைடு இல்லாத புதிய பயனர்கள் நாள் ஒன்றுக்கு 400 பதிவுகளையும் பார்க்க முடியும்" என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் மூன்றாவது முறையாக மாற்றிய எலான் மஸ்க் தனது அறிவிப்பில்,"வெரிஃபைடு பெற்று இருக்கும் ட்விட்டர் பயனர்கள் ஒரு நாளில் 10,000 பதிவுகளையும், வெரிஃபைடு பெறாத பயனர்கள் 1,000 பதிவுகளையும், வெரிஃபைடு இல்லாத புதிய பயனர்கள் நாள் ஒன்றுக்கு 500 பதிவுகளையும் பார்க்க முடியும்" எனக் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |