கண்ணீருடன் ஈஸ்வரி சொன்ன கடைசி வார்த்தை.. கதிகலங்கி நின்ற கோபி- இனி நடக்க போவது என்ன?
பாக்கியலட்சுமி சீரியல் கோபியின் அம்மா- ஈஸ்வரி மகனின் கஷ்டத்தை சமாளிக்க முடியாமல் கண்ணீருடன் ஒரு வார்த்தை கூறுகிறார்.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் சென்றுக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.
மற்ற சீரியல்கள் போல் அல்லாமல் கணவர் பிரிந்து தன்னுடைய குடும்பத்தை தனிப் பெண்ணாக இருந்து எப்படி சாதிக்கிறார் என்பதனை மூல கருத்தாக கொண்டு கதைக்களம் நகர்த்தப்படுகின்றது.
பாக்கியாவிற்கு என எதிர்ப்பு வந்தாலும் தனியாளாக நின்று சாதிக்கும் வலிமையை கொடுத்து கதையை திசைத்திருப்பியுள்ளார் இயக்குநர். இப்படியொரு நிலையில், தற்போது பாக்கியாவின் இரு மகன்களின் திருமண வாழ்க்கையிலும் சிக்கல் வந்துள்ளது.
இதற்கு தனியாக முடிவு எடுக்க முடியாத பாக்கியா கோபியின் உதவியை நாட முயற்சிக்கிறார். ஆனால் இதனை ராதிகா நடுவில் வந்த கெடுத்து விடுவார் போல் தெரிகின்றது.
அதிலும் பாக்கியாவிடம் வீண் வம்பிழுத்து என்ன விடயம் என பிடுங்க முயற்சிக்கிறார். பாக்கியா எதுவும் கூறாமல் சென்று விடுகிறார்.
கடைசியாக சொன்ன ஒற்றை வார்த்தை
இந்த நிலையில் வீட்டு வாசலில் ஈஸ்வரியை பார்க்கிறார். பின்னர் வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டங்கள் பற்றி பேசுகிறார்.
நஷ்டங்களை எவ்வாறு அடைப்பது என தெரியாமல் புலம்பி கொண்டிருக்கிறார். மகன் புலம்புவதை கேட்ட ஈஸ்வரி ஒரு முடிவுடன் தன்னுடைய அறைக்குள் அழைத்து சென்று அவரிடம் உள்ள நகைகளை வைத்து கொள்ளும் படி கூறுகிறார்.
ஆனால் கோபிக்கு நகையை வாங்க விருப்பம் இல்லை. இதனால் வேதனை அடைந்த கோபி எக்காரணம் கொண்டு இவை எனக்கு வேண்டாம் என கூறுகிறார்.
இப்படி நீ கஷ்டத்தில் இருப்பது ராதிகா - பாக்கியாவிற்கு தெரிந்தால் என்ன ஆவது? என ஈஸ்வரியும் புலம்புகிறார். என்ன நடந்தாலும் பார்த்துக்கலாம் என தைரீயமாக கோபி கிளம்புகிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |