பார்வை இழந்தவர்கள் கண்கள் இல்லாமல் பார்வை பெற முடியும்! எலன் மஸ்க் நிறுவனம் உருவாக்கிய புதிய கருவி என்ன?
நம்மை சுற்றியுள்ள அனைத்தும் தெரிந்து நாம் செயல்படுவதற்கு பார்வை என்பது மிகவும் முக்கியம். பார்வையானது கண்களில் இருந்து தான் பெறப்படுகின்றது. கண்களை எப்போதும் பராமரித்து வந்தால் கண் பிரச்சனைகளை எளிதில் தவிர்க்கலாம்.
கண்கள் நமக்கு எவ்வளவோ முக்கியத்துவம் பெறுகின்றது. ஆனால் பார்வை அற்றவர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்வார்கள். இது பார்வை உள்ளவர்களுக்கு மட்டும் தான் தெரியும். அந்த வகையில் தற்போது எலன் மஸ்க் நிறுவனத்தின் கண்டுபிடிப்புகள் பற்றி பலருக்கும் தெரியும்.
தற்போது இதன் அடுத்த முயற்ச்சி தான் பிறவியிலேயே பார்வை இழந்தவர்கள் அல்லது விபத்து மற்றும் நோய் காரணமாக பார்வை இழந்தவர்களுக்கு மீண்டும் பார்வை கிடைக்கச் செய்யும் Blindsight என்ற சிப் கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளது. இது பற்றி தற்போது இங்கு விரிவாக பார்க்கலாம்.
எலன் மஸ்க் நியூராலிங்
பிறவியிலேயே பார்வை இழந்தவர்கள் அல்லது விபத்து மற்றும் நோய் காரணமாக பார்வை இழந்தவர்களுக்கு மீண்டும் பார்வை கிடைக்கச் செய்யும் Blindsight என்ற சிப் எலன் மஸ்க் கண்டுபிடித்துள்ளது.
மனிதர்களில் பெரும்பாலான பார்வை இழப்பு என்பது கண்கள் பாதிப்பு, ரெட்டினா பாதிப்பு போன்றவைகளாலே ஏற்படுகிறது. அந்த வகையில் பார்த்தால் நாம் காணும் காட்சி நமது கண்களில் உள்ள லென்ஸ் வழியே உள்ளே சென்று ரெட்டினாவால் எலட்ரிக் சிக்னலாக மாற்றப்படுகிறது.
மூளைக்கு கடத்தப்படும் இதன் மூலம் அதில் உள்ள லட்சக்கணக்கான நியூரான்களால் காட்சியாக விரிகிறது. இவை அனைத்தையும் மூளையில் உள்ள Cortex-ஆல் கட்டுப்படுத்தப்படுகின்றன. இதன் காரணமாக நாம் கண்கள் இல்லாமலே பார்வையை பெற முடியும்.
இந்த நிலையில் தான் எலான் மஸ்க் நிறுவனத்தின் Blindsight கருவி, கண்கள் மற்றும் ரெட்டினா இல்லாமல் பார்வை தருகிறது. அதாவது நாம் பார்ப்பதற்கான அனைத்து விஷயங்களையும் கட்டுப்படுத்தும் Cortexல் ஒரு சிப்பை பொருத்தி, அதை மூளையுடன் இணைக்கிறது.
பார்வை இழந்தவர் அணியும் ஒரு கண்ணாடியில் பொருத்தப்படும் கேமரா மூலம் உள்வாங்கப்படும் காட்சிகள் அனைத்தும், ஒரு மொபைல் கருவி மூலம் Cortexல் பொருத்தப்படும் சிப்-க்கு கடத்தப்பட்டு, மனித மூளை தூண்டப்பட்டு, காட்சிகளாக விரியும்.
இதன் மூலம் கண்கள் இல்லாமலேயே பார்வை பெற முடியும் என்பதை Blindsight நிரூபித்துள்ளது. எலான் மஸ்க்கின் இந்த நவீன கண்டுபிடிப்புக்கு, அமெரிக்காவின் மருந்து மற்றும் நிர்வாக அமைப்பான FDA அனுமதி அளித்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |