ஐபிஎல் இந்த ஆண்டில் ஸ்ட்ரைக் ரொட்டேஷன் புதிய விதி அமல்! பேட்ஸ்மேன்களுக்கு சிக்கலா?
ஐபிஎல் போட்டியானது மார்ச் 26ம் தேதி மும்பையில் தொடங்குகிறது. இரண்டு மாதங்களுக்கு மேல் நடைபெறும் இந்த போட்டியானது மிகப்பெரிய திருவிழாவாக ரசிகர்கள் கொண்டாட இருக்கின்றனர்.
ஸ்ட்ரைக் ரொட்டேஷன் விதி
இந்த நிலையில், இந்த ஐபிஎல் சீசனில் புது புது விதிமுறைகளை பிசிசிஐயும், ஐபிஎல் நிர்வாகமும் கடைப்பிடிக்கப்போகிறது. அந்த வகையில், தற்போது ஸ்ட்ரைக் ரொட்டேஷன் என்பது ரசிகர்களிடையே மிகவும் குழப்பமாக விதிமுறையாக இருக்கிறது.
இந்த விதி என்னவென்றால், ஒரு பேட்ஸ்மேன் பவுலர் போடும் பந்தினை தூக்கி அடிக்கும் போது அது கேட்ச்க்கு செல்கிறது என்று வைத்துக்கொள்வோம். அப்படி தூக்கி அடிக்கப்பட்ட பந்து பீல்டரின் கைகளுக்கு செல்வதற்கு முன்னால் இரண்டு பேட்ஸ்மேன்களும் ஒருவரை ஒருவர் கிராஸ் செய்திருந்தால் எதிர் முனையில் இருக்கும் நான் ஸ்ட்ரைக்கர் அடுத்த பந்தில் பேட்டிங் செய்து கொள்ளலாம்.

ஆனால் , தற்போது கொண்டு வரப்பட்டுள்ள ஸ்ட்ரைக் ரேட்டேஷன் விதிப்படி நீங்கள் பந்து கேட்ச் செய்யப்படுவதற்கு முன்னதாக நீங்கள் ரன்னை ஓடி முடித்திருந்தாலும் பந்து கேட்ச் செய்யப்பட்டு விட்டால் புதிதாக வரும் வீரர்தான் நேரடியாக அடுத்த பந்தை எதிர்கொள்ள வேண்டும் இதுவே விதி கூறும் கருத்து.
அதேப்போல், ஓவரின் கடைசி பந்தில் கேட்ச் செய்யப்பட்டிருந்தால் அது கணக்கு கிடையாது. எதிர்முனையில் இருப்பவர் ஓவர் ரொட்டேஷன் முறையில் அடுத்த ஓவரில் பேட்டிங் செய்து கொள்ளலாம்.
தற்போது வெளியிடப்பட்டுள்ள விதிமுறை 18.11 விதி இதைத்தான் கூறுகிறது. எனவே இனி ஒரு பேட்ஸ்மென் கேட்ச் மூலம் ஆட்டமிழந்தால் புதிதாக வரும் வீரர்தான் அடுத்த பந்தை எதிர்கொள்ள முடியும் என்பதே இந்த விதிமுறையாகும்.

காரணம் என்ன?
இதற்கு பல காரணங்களை நெட்டிசன்கள் கூற, முக்கிய காரணமாக, சூப்பர் ஓவர் அல்லது மேட்சை முடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில், எதிர்முனையில், நல்ல பேட்ஸ்மேன் இருந்தால், மறுமுனையில் பேட்டிங் செய்யும் வீரர் அவரை விளையாட வைக்க சிறு யுக்தியாக சிக்ஸரோ அல்லது கேட்ச்சோ அடிக்க முற்பட்டு மறுபக்க ஓடி விடுவார்.
இதனால் மறுமுனையில் இருக்கும் பேட்ஸ்மேன் ஸ்டிரைக்கிற்கு வந்துவிடுவார். இதன் காரணமாகவே கூட இந்த விதிமுறையை பின்பற்றி இருக்கலாம் எனக்கூறப்படுகிறது.