புதிதாக வாங்கிய புல்லட் வெடித்து சிதறிய பயங்கரம்
ஆந்திராவில், புத்தம் புது ராயல் என்ஃபீல்ட் புல்லட் வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர பிரதேசம் அனந்தபுரம் மாவட்டத்தை சேர்ந்த ரவிச்சந்திரா, தனது புதிய புல்லட்டிற்கு வாகன பூஜை செய்வதற்காக அனந்தபூரில் உள்ள புகழ்பெற்ற கசாபுரம் ஆஞ்சநேய சுவாமி கோவிலுக்கு சென்றுள்ளார்.
இங்கு சாலையோரம் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு பூஜைக்கு ஏற்பட்டு செய்ய சென்றார்.
சிறிது நேரத்தில் பைக்கில் இருந்து புகை வெளியேறி திடீரென பைக்கில் தீப்பிடித்தது. பின் பைக் வெடிகுண்டு போல் வெடித்து, தீ கொழுந்துவிட்டு எரிந்தது.
இதைப் பார்த்து அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் பீதியடைந்தனர். இதனால் வாகன நிறுத்துமிடத்தில் புல்லட்டை சுற்றி நிறுத்தியிருந்த பைக்குகளும் தீப்பிடித்து எரிந்தது.
திருமணத்தை மீறிய உறவு? காதல் மனைவியை குத்திக் கொன்ற கணவன்