PAN 2.0 அனைவருக்கும் கட்டாயமா? எப்படி பெற்றுக் கொள்வது?
இந்தியாவில் மத்திய அரசு அறிவித்துள்ள புதிய பான் கார்டு 2.0 சிறப்பம்சம் மற்றும் இதனை எளிதாக எப்படி பெற்றுக் கொள்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
PAN 2.0
மத்திய அரசு அறிவித்துள்ள புதிய பான் 2.0 கார்டில் பாதுகாப்பு அம்சம் சிறந்ததாக உள்ளது. பழைய கார்டை விட இது சிறந்ததாக இருக்கின்றது.
புதிய பான் கார்டில் உள்ள QR பழைய பான்கார்டில் கிடையாது. இதனால் பிற்காலத்தில் எந்தவொரு பிரச்சினைகளும் வராது. ஆனால் அனைவரும் பான்கார்டு 2.0 அப்டேட் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை எனவும் கூறப்படுகிறது.
இருப்பினும் இந்த புதிய பான்கார்டு 2.0க்கு அப்டேட் செய்து கொள்வதால் பான்கார்டு பாதுகாப்பு தன்மை கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.
பழைய பான்கார்டு வைத்திருப்போர் புதிய பான்கார்டு அப்டேட் செய்தால் மட்டும் போதும், வேறு எந்த மாற்றமும் செய்ய வேண்டாம் என்று அரசாங்கத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறு பெற்றுக் கொள்வது?
முதலில் NSDL இன் PAN மறுபதிப்பு வலைப்பக்கத்திற்குச் சென்று, அதில் PAN, ஆதார் அட்டை எண் மற்றும் பிறந்த தேதி போன்ற தேவையான விபரங்களை நிரப்பவும். பின்பு மொபைல் எண்ணிற்கு வந்திருக்கும் OTPயை பதிவு செய்ய வேண்டும்.
இந்த பான் கார்டை இ- பான்கார்டாக மட்டும் வேண்டும் எனில் இதில் எந்தவிதக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. ஆனால் இந்த பான்கார்டு கைகளில் வேண்டுமெனில், QR குறியீட்டுடன் பான் கார்டு மறுபதிப்புக்கு விண்ணப்பிக்க ரூ.50 செலுத்த வேண்டும்.
50 ரூபாய் செலுத்தியவுடன் உங்கள் பான் கார்டு மீண்டும் அச்சிடப்பட்டுப் பதிவு செய்யப்பட்ட உங்கள் முகவரிக்கு அனுப்பப்படும். இந்த புதிய பான் கார்டு உங்கள் கைகளுக்கு 15 - 20 நாட்களுக்குள் கிடைக்கும் என கூறப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |