Public Wi-Fi பயனராக நீங்க? அப்போ இந்த விடயங்களை ஞாபகத்தில் வைச்சிக்கோங்க
Public Wi-Fi Network எப்போதும் பாதுகாப்பில்லாதவையாக பார்க்கப்படுகின்றது. இதனால் Hackers அவர்களுடைய டார்கெட்டுகளை எளிதில் Hack செய்து விடுகிறார்கள்.
இந்த Network மூலமாக சைபர் கிரிமினல்கள் மிக எளிதாக டேட்டாக்களை திருடி விடுகின்றனர். இதில் பாஸ்வேர்டுகள் மற்றும் கிரெடிட் கார்டு விவரங்கள் போன்ற முக்கியமான தகவல்கள் அடங்கும்.
எனவே Public Wi-Fi குறித்த எப்போதும் விழிப்புணர்வோடு இருப்பது அவசியம்.
அந்த வகையில், Public Wi-Fi பயனர்களாக இருப்பவர்கள் என்னென்ன விடயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
Public Wi-Fi பயனர்கள் கவனிக்க வேண்டிய விடயங்கள்
1. வெர்ச்சுவல் பிரைவேட் நெட்வொர்க்கை (VPN) பயன்படுத்துதல்.
Public Wi-Fi-ஐ பயன்படுத்தும் பொழுது VPN இன்டர்நெட் டிராஃபிக்கை என்கிரிப்ட் செய்து விடும். இதனால் மற்றவர்களால் அதனை படிக்கவோ பார்க்கவோ முடியாது. மாறாக அது உங்களுடைய சாதனத்தில் இன்டர்நெட் வழியை பாதுகாக்கும்.
பல்வேறு அளவுகளில் பாதுகாப்பு மற்றும் வேகத்தை வழங்கக்கூடிய பல VPN சேவைகள் உள்ளன. அந்த வகையில், டு ஃபேக்டர் ஆதண்டிகேஷன் கணக்கு அதிகக் கூடிய பாதுகாப்பு அடுக்காக உள்ளது. இது இருக்கும் சமயத்தில் உங்களுடைய ரகசிய இலக்கத்தை யாராவது திருவிட்டால் கூட செகண்ட் ஃபேக்டர் இல்லாமல் கணக்கை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும்.
2. முக்கியமான தகவல்கள் தவிர்த்தல்.
Public Wi-Fiயை உங்களுடைய யூசர் ஐடி, பாஸ்வோர்ட், கிரெடிட் கார்டு தகவல்கள் போன்றவற்றை பயன்படுத்துவதை தவிர்த்து கொள்வது நல்லது. ஆன்லைன் பேங்கிங் அல்லது ஷாப்பிங் போன்றவைகளுக்காகவும் பயன்படுத்த வேண்டும்.
3. software அப்டேட் செய்தல்.
வழக்கமான முறையில் software அப்டேட் செய்வதன் மூலமாக உங்களுடைய சாதனங்களுக்கு தேவையான பாதுகாப்பை பெற்றுக் கொள்ளலாம். உங்களுடைய Operating system, browser மற்றும் Applications அனைத்தும் அப்டேட் ஆக இருக்க வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |