5G ஆதரவுடன் தரமான அம்சங்களை கொண்ட Oppo ஸ்மார்ட்போன் அறிமுகம்!
5ஜி ஆதரவுடன் தரமான அம்சங்களைக் கொண்டு Oppo நிறுவனம் சீனாவில் Oppo A58 5G ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
கடந்த சில காலமாக Oppo A58 5G ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தது.
இதனால் ஸ்மார்ட்போன் பிரியர்களின் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது.
ஸ்மார்ட்போன் பிரியர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக 5G ஆதரவுடன் Oppo நிறுவனம் தரமான ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
இந்த ஸ்மார்ட்போன்கள் Breeze Purple, Star Black மற்றும் Tranquil Sea Blue நிறங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பல்வேறு கேமரா அம்சங்கள்
குறிப்பாக இந்த புதிய போன் பல்வேறு கேமரா அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.
செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கு என்றே 8எம்பி கேமராவுடன் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Oppo ஏ58 5ஜி போனில் மீடியாடெக் Dimensity 700 சிப்செட் உள்ளது.
எனவே இந்த ஸ்மார்ட்போன் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக இந்த போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அதேநேரம், 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியை இந்த Oppo ஏ58 5ஜி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.
அதேபோல் இந்த போன் 5ஜி வசதியுடன் வெளிவந்துள்ளதால் உலக அளவில் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
சார்ஜ் பற்றிய கவலை வேண்டாம்
5000 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த Oppo ஏ58 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டிருப்பதால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது, நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும்.
பின்பு 33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளைக் கொண்டுள்ளது.
சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த புதிய போன் மிக விரைவில் உலக சந்தைக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.