புதிதாக திருமணம் ஆன கணவன் மனைவி கட்டாயம் இதை செய்யக்கூடாதாம்?
கணவன் மனைவி உறவு விஷயங்களில் முக்கியமான ஒன்று தாம்பத்தியம் தான். ஆனால் இது கணவன் மனைவிக்கு இடையே குறைந்து வருகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
முக்கிய காரணமாக கடுமையான வேலை நெருக்கடிகள், மன அழுத்தம், பொருளாதார சிக்கல், சமூக வலைதளத்தின் தாக்கம் போன்று பல்வேறு காரணங்களால் தாம்பத்தியம் பெரும் தடைபடுகிறது.
இவை தான் திருமண உறவின் விரிசலுக்கும் வழிவகை செய்வதாக கூறப்படுகிறது.
திருமணத்திற்கு பின் அன்பை பரிமாறவும், துக்கங்களை பகிரவும் தோழனாக, கணவனாக, அப்பாவாக, அம்மாவாக தேவைப்படும் உறவை சகல விதத்திலும் கொடுத்து இருமனதை சீர் செய்ய உதவும். '
இன்றைய தலைமுறையினர்கள் அதிகளவில் விபரம் புரியாமலேயே பல வழிகளில் சிக்கி கொண்டு உடலை கெடுத்துக்கொள்கின்றனர்.
ஆண், பெண்ணாய் திருமண பந்தத்திற்குமுன்னர் எதற்காக இவ்வாழ்க்கை என்ற தேடல் இருக்கும்.

திருமணம் முடிந்ததும் இக்கேள்வி இருக்காது. முத்தம், செல்லச்சண்டை, ஆண்மை, பெண்மை போன்றவற்றை உணர வைக்க வேண்டும்.
கணவன் மனைவி இருவருமே வாழ்க்கையை புரிந்துகொண்டு ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து வாழ வேண்டும்.
கணவருக்கும் மனைவிக்கும் ஒருவரிடம் ஒருவர் அவரவர் சிறுவயது, பள்ளி, கல்லூரி அனுபவங்களை பகிர்ந்து கொள்ள ஆசையிருக்கும்.
பல நேரம் சொன்ன சம்பவங்களையே திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருப்போம்.
அதை ஒரு நிமிடம் கேட்டு பல முன் அனுபவ விஷயங்களை பகிர்ந்துக்கொள்ளும் போது இருவருக்கும் ஒரு புரிதல் உண்டாகும்,.
சின்னச் சின்ன விஷயங்களில் உங்களுக்கு இருக்கும் பயத்தை இணையிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்.