ஜாதக வடிவில் நண்பர்கள்.. மணமகனுக்கு காத்திருந்த சர்ப்ரைஸ்! ட்ரெண்டாகும் திருமண பேனர்
திருமணம் என்பது, மணமக்கள் இருவரின் வாழ்க்கையிலும் மிக முக்கியமான ஒரு நாளாக பார்க்கப்படுகிறது.
இதனால், அப்படிப்பட்ட ஒரு முக்கியமான தினத்தை இன்னும் நினைவு மிக்க ஒரு தருணமாக மாற்ற பல்வேறு அசத்தலான புதுமைகளை செய்து வருகின்றனர்.
சமீப காலத்தில் நிறைய திருமண அழைப்பிதழ்கள் மற்றும் திருமணம் பேனர்கள் கூட பெரிய அளவில் வைரலாகி இருந்தது.

ஜாதக வடிவில் நண்பர்கள்
தற்போது திடீரென்று ஒரு திருமண பேனர் இணையவாசிகளின் கவனத்தினை ஈர்த்து வருகின்றது.
மணமகனின் நண்பர்கள் தங்களின் புகைப்படம், பெயர், ராசி உள்ளிட்ட விஷயங்களை ஜாதக வடிவில் குறிப்பிட்டுள்ளனர்.
கூடவே, "கல்யாணத்துக்கு வாங்க, அடுத்த மாப்பிள்ளை நாங்க" என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது.
90 ஸ் கிட்ஸ் திருமணம் என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், தங்களுக்கு திருமணம் ஆகவில்லை என்பதை குறிப்பிட்டு இளைஞர்கள் பேனர் வைத்துள்ளதை பலரும் ஒரு நிமிடம் நின்று பார்த்து செல்கின்றனர்.