திரும்ப வந்துட்டேனு சொல்லு... குணசேகரின் புதிய காட்சியை வெளியிட்ட பிரபல ரிவி
எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக களமிறங்கிய வேல ராமமூர்த்தியின் காட்சியை பிரபல ரிவி வெளியிட்டுள்ளது.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது. சமீபத்தில் எதிர்பாராத விதமாக ஆதிரை கரிகாலன் திருமணம் நடைபெற்றுள்ளது.
ஆதிகுணசேகரனாக வந்த வேலமூர்த்தி... ஒண்ணு விடாமல் ஒப்புவிக்கும் தம்பிகள்: அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் எதிர்நீச்சல்
பெண்களின் அடிமைதனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.
குறித்த சீரியல் பயங்கர எதிர்பார்ப்பில் சென்று கொண்டிருந்த தருணத்தில் சீரியலின் கதாநாயகன் குணசேகரன் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.
வேல ராமமூர்த்தி
ஆதி குணசேகரனின் மறைவிற்கு பின்பு அவரது கதாபாத்திரத்தில் ஏற்ற நடிகரை தேடி வந்த நிலையில், தற்போது வேல ராமமூர்த்தி புதிதாக என்ட்ரி ஆகியுள்ளார்.
ஆதி குணசேகரன் வீட்டில் உள்ள பிரச்சினை காரணமாக வீட்டை விட்டு காணாமல் சென்றது போன்று கதை அமைக்கப்பட்டிருந்தது.
தற்போது புதிய குணசேகரன் என்ட்ரி ஆகியுள்ளார். தம்பிகளை பொலிசார் அடித்து கொடுமைப்படுத்திய போது மாஸாக என்ட்ரியாகி பொலிசாரையே தாக்கியுள்ளார்.
மறைந்த மாரிமுத்துவின் நடிப்பிற்கு இணையாக வேல ராமமூர்த்தியின் நடிப்பு இருக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |