ஆதிகுணசேகரனாக வந்த வேலமூர்த்தி... ஒண்ணு விடாமல் ஒப்புவிக்கும் தம்பிகள்: அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் எதிர்நீச்சல்
எதிர்நீச்சல் சீரியலில் ஆதிகுணசேகர் கதாப்பாத்திரத்தை நிரப்புவதற்கு நடிகர் வேலமூர்த்தி தயாராகி சீரியலில் என்ரி கொடுத்திருக்கிறார்.
எதிர்நீச்சல் சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் இப்போது விறுவிறுப்பான கதைக்களத்துடன் வேற லெவலில் நகர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த சீரியல் முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்தி தான் இந்த கதைக்களம் நகர்ந்துக் கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் கனிகா, மாரிமுத்து, சத்தியப்பிரியா, பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா, சபரி பிரசாந்த், மதுமிதா, என ஒரு பெரிய பட்டாளமே தங்களுக்கு கொடுத்த கேரக்டரில் தொடர்ந்து சிறப்பாக நடித்து வருகிறார்கள்.
வேலமூர்த்தியின் என்ரி
எதிர்நீச்சல் சீரியலில் ஆதிகுணசேரகனாக நடித்து வந்த மாரிமுத்து திடீரென உயிரிழந்ததால் அவரின் இடத்தை நிரப்ப முடியாமல் கொஞ்ச நாட்களாக மாரிமுத்து நடித்த சில பழைய காட்சிகளை எடுத்து சமாளித்து வந்துக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் ஆதிகுணசேகரன் மீண்டும் வருவார் என்று வெறும் கால்களைக் காட்டி இழுத்துக் கொண்டு வந்தனர். அந்தவகையில் இன்று வேலமூர்த்தியின் வருகையை மாஸாக காட்டி வருகிறார்கள்.
இந்நிலையில், வந்ததும் வராததுமாய் இத்தனை நாள் வீட்டில் நடந்த கலவரங்களை எல்லாம் ஒன்னு விடாமல் ஒப்புவித்து கோபத்தை தூண்டி விடும் காட்சிகள் ப்ரோமோவில் வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |