மீண்டும் அச்சுறுத்தும் புதிய வகை கொரோனா: தீவிரமாக பரவுவதால் அதிகரிக்கும் பதற்றம்
சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதால் தடுப்பூசி செலுத்தும் பணியை அந்த நாட்டு அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளது.
சீனாவில் மீண்டும் பரவும் கொரோனா
சீனாவில் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ் மீண்டும் மிகப்பெரிய பாதிப்பு அலைகளை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதால் அதை தடுக்கும் பொருட்டு அந்நாட்டு அரசு தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்தி வருகிறது.
இது தொடர்பாக ஊடகங்கள் வழங்கியுள்ள தகவலில், சீனாவில் ஓமிக்ரோன் வைரஸின் திரிபு வகையான XBB என்ற புதிய வகை கொரொனா வைரஸ் வேகமாக பரவத் தொடங்கி இருப்பதாக தெரிவித்துள்ளது.
இந்த வைரஸ் பரவல் ஜூன் மாதத்தில் உச்சத்தை தொடும் என்றும் அப்போது இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6.5 கோடியாக இருக்கலாம் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் XBB என்ற புதிய வகை கொரோனா வைரஸை தடுக்க அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய தடுப்பூசிகள்
Bloomberg
இதற்கிடையில் சீனாவில் பரவும் இந்த புதிய திரிபு வைரஸை தடுக்க சீனாவின் தொற்றுநோயியல் நிபுணர் ஜாங் நன்ஷான், XBB. 1.9.1, XBB. 1.5 ஆகிய இரண்டு புதிய தடுப்பூசிகளை மேற்கோள் காட்டியுள்ளார்.
அத்துடன் சீனா வரும் வாரங்களில் மேலும் 4 தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.