கண்டிஷன் போட்டு பிக்பாஸ்க்குள் உள்நுழையும் புதிய போட்டியாளர்?
பிக் பாஸ் வீட்டிற்குள் ஜிபி முத்துவிற்கு பதிலாக உள்நுழையவிருக்கும் மன்சூர் அலி கான் ஒரு புதிய நிபந்தனையை முன்வைத்துள்ளார்.
பிக் பாஸ் சீசன் 6 ஆரம்பம்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி, தற்போது ஆறாவது சீசன் நடந்துக் கொண்டிருக்கிறது. இதில் சுமார் 21 பிரபலங்கள் கலந்துக் கொண்டுள்ளனர்.
இந்த சீசன் ஆரம்பத்திலிருந்து போட்டியாளர்களிடையே கடுமையான வாக்குவாதம் நிலவி வருகிறது. மேலும் இப்போட்டியில் முக்கிய போட்டியாளராக பேசப்பட்ட ஜிபி முத்து சில தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியேறியுள்ளார்.
இதனை தொடர்ந்து சாந்தி மாஸ்டர் மக்களால் வெளியேற்றப்பட்டுள்ளார். இந்நிலையில் தற்போது மொத்தமாகவே 19 போட்டியாளர்கள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

புதிய போட்டியாளரின் நிபந்தனை
மேலும் ஜிபி முத்துவிற்கு பதிலாக போட்டியில் உள்நுழையும் போட்டியாளர் பிரபல நடிகர் மன்சூர் அலி கான் என தகவல் வெளியாகி வந்தது.
தொடர்ந்து தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கு முன் ஒரு புதிய நிபந்தனையொன்றை முன்வைத்துள்ளார். "பிக் பாஸில் கூத்தடிப்பது எனக்கு பிடிக்கல. நான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்ல மாட்டேன். அப்படி செல்வதாக இருந்தால் அங்கு நான் தான் பிக்பாஸாக இருப்பேன்" என தெரிவித்துள்ளார்.
இவரின் இந்த பதிலை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.
