வாட்ஸ்அப் பிளாக் செய்யப்பட்டிருப்பதை கண்டுபிடிக்க ஒரு டிப்ஸ்- செக் பண்ணி பாருங்க
தற்போது இருக்கும் டிஜிட்டல் உலகத்தில் வாட்ஸ்அப் பயன்படுத்தாதவர்கள் என்று யாரும் இருக்க முடியாது.
ஒருவருடன் வாட்ஸ்சப்பில் பேசிக் கொண்டிருக்கும் பொழுது திடீர் என எந்தவித காரணமும் இல்லாமல் பிளாக் செய்து விட்டார்கள் என்றால் மனம் உடைந்து போகும்.
இன்னும் சிலருக்கு அவர்கள் தங்களை பிளாக் செய்திருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிப்பதற்கே சில மணி நேரம் ஆகும். பிளாக் செய்தவுடன் சிலரின் போனில் அதனை பார்க்க முடியாமல் இருக்கலாம். தன்னை பிளாக் செய்திருக்கிறார் என்று தெரியாமல் நாம் அவருடன் தொடர்பில் இருப்போம்.
இது தேவையில்லாத மன உளைச்சலை ஏற்படுத்தும். அப்படியான சந்தேகங்களை தீர்ப்பதற்காக புதிய வழிமுறையொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், வாட்ஸ்அப் ஒருவர் தன்னை பிளாக் செய்திருக்கிறாரா? என்பதை உறுதிச் செய்து கொள்வதை எப்படி கண்டுபிடிக்கலாம் என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.

வாட்ஸ்அப் பயன்படுத்தும் ஒருவருக்கு தன்னை பிளாக் செய்து விட்டார் என்பதை செயலி எந்தவிதத்திலும் தெரியப்படுத்தாது. எனவே உங்களுக்கு இதனை கண்டுபிடிப்பது கடினமாக சற்று சவாலாக இருக்கலாம். ஒரு சில அறிகுறிகள் மற்றும் சிறு சோதனைகள் மூலம் பிளாக் செய்து இருக்கிறார்கள் என்பதை கண்டறியலாம்.
கண்டறிவது எப்படி?
1. லாஸ்ட் சீன் அல்லது ஆன்லைன் ஸ்டேட்டஸ் காட்டாமல் இருக்கும். அப்போது நீங்கள் பேசிக் கொண்டிருக்கும் பயனர் உங்களை பிளாக் செய்து இருக்கிறார் என்பது உறுதியாகிறது.
2. சிலர் தன்னுடைய தனிப்பட்ட விருப்பம் காரணமாக லாஸ்ட் சீன் அல்லது ஆன்லைன் ஸ்டேட்டஸ் ஆகியவற்றை பிரைவசி செட்டிங்கில் மறைத்து வைத்திருப்பார்கள். எனவே சிறிது நேரம் கவனிக்க வேண்டும்.

3. ப்ரொபைல் போட்டோ பிளாக் செய்திருந்தால் காட்டாது. வெற்று சாம்பல் நிறமான ஒரு ஐகான் காட்டிக் கொண்டிரக்கும். அப்படியான அறிகுறிகள் தெரிந்தால் அவர் உங்களை பிளாக் செய்திருக்கிறார் என்பது உறுதி.
4. வாட்ஸ்அப் கால் எடுக்க முயற்சித்தால் அவர் உங்களை பிளாக் செய்திருந்தால் ரிங் போகும் சத்தம் கேட்காது. அத்துடன் கால் துண்டிக்கப்படுவதற்கு முன்பு 'Calling' என்று காட்டப்படும். இதுவொரு வலுவான அறிகுறியாகும்.

5. அவர் ஆன்லைனில் இருக்கிறார் என நினைத்து கொண்டு நீங்கள் அனுப்பும் மெசேஜ் எல்லாம் சிங்கிள் டிக்கில் போய் சேரும். சில சமயங்களில் இணைய வசதி இல்லாவிட்டாலும் மெசேஜ் சிங்கிள் டிக் தான் காட்டும்.
மீண்டு வருவது எப்படி?
ஒருவர் உங்களை பிளாக் செய்து விட்டால் நீங்கள் அவர்களை அதிகமாக தொல்லை செய்யாமல் அவர்களுக்கான பிரைவசிக்கு மரியாதை கொடுத்து ஒதுங்கி விடுங்கள். இதுவே எந்தவொரு பிரச்சினைக்கும் சரியான தீர்வாகும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |