தவறியும் உங்க பிரச்சினையை இந்த 5 நபர்களிடம் மட்டும் பகிராதீர்கள்... ஆபத்து உறுதி!
தனது அறிவாற்றல் மற்றும் தெளிந்த சிந்தனையால் உலகம் முமுவதும் பிரபல்யம் அடைந்தவர் தான் சாணக்கியர். இவர் தனது வாழ்க்கையில் கடைப்பிடித்த பல்வேறு விடயங்கள் மற்றும் வாழ்க்கையில் சந்தித்த சவால்கள் மற்றும் அனுபவங்களின் தொகுப்பே சாணக்கிய நீதி ஆகும்.
இன்றும் உலகளவில் சாணக்கிய நீதியை பின்பற்றுபவர்கள் ஏராளம். சாணக்கிய நீதியின் அடிப்படையில் வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களை குறிப்பிட்ட சிலருடன் பகிர்ந்துக்கொள்ள கூடாது என்கின்றார்.
பொதுவாகவே துக்கத்தை மற்றவர்களிடம் கூறினால் அது குறையும் என அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் சாணக்கியரின் கூற்றுப்படி குறிப்பிட்ட சிலரிடம் நமது கவலையை பகிர்வதனால் இன்னும் கவலை அதிகரிக்கும் என்கின்றார்.
இவ்வாறானவர்களிடம் தனிப்பட்ட விடயங்களை பகிர்வது மிகவும் ஆபத்தானது என்கின்றார். அப்படிப்பட்டவர்கள் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
எல்லோரிடமும் நண்பராக இருப்பவர்கள்
எல்லோரிடமும் நண்பராக இருப்பவர்கள் யாருக்கும் உண்மையாக இருக்க மாட்டார்கள். இவர்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் நேரத்துக்கு ஏற்றாற் போல் மாறும். இதனால் அப்படிப்பட்டவர்களிடம் உங்கள் துயரங்களையோ, ரகசியங்களையோ பகிர்வது மிகவும் ஆபத்தானது.
அனைத்தையும் கேலி செய்பவர்கள்
வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து வாழ வேண்டும் என்பது உண்மை தான். அதற்காக அனைத்தையும் கேலி செய்வர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். இப்படிப்பட்டவர்களுடன் ஒரு போதும் உங்கள் துக்கத்தை பகிர்ந்துக்கொள்ளாதீர்கள்.இவர்கள் அதையும் கூட கேலி செய்யும் வாய்ப்பு காணப்படுகின்றது.
சுய நலனில் மட்டும் அக்கறைக் கொண்டவர்கள்
எப்போதும் தங்களின் நலனில் மாத்திரம் அக்கறை கொண்டவர்கள் அவர்களுக்கு சாதகமான விடயங்கள் குறித்து மாத்திரமே அதிகம் சிந்திப்பார்கள்.இவர்களிடம் நமது தனிப்பட்ட பிரச்சினைகள் குறித்து கதைப்பது மிகவும் ஆபத்தானது. இவர்கள் அதையும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள வாய்ப்புள்ளது.
பொறாமை கொண்டவர்கள்
மற்றவர்களை பார்த்து பொறாமை படுபவர்களிடம் உங்களின் கவலையை பகிர்ந்துக்கொள்வதனால் உங்கள் துக்கங்களை பார்த்து மகிழ்ச்சி அடைவார்கள். இவர்களிடம் தவறியும் உங்கள் ரகசியங்களையும் கவலையையும் ஒருபோதும் வெளிப்படுத்தாதீர்கள்.
சிந்திக்காமல் பேசுபவர்கள்
உங்கள் வாழ்க்கையில் எந்த சோகத்தையோ, பிரச்சனையையோ அல்லது ரகசியத்தையோ சிந்திக்காமல் எப்போதும் பேசிக்கொண்டே இருப்பவர்களிடம் பகிர்ந்துக்கொள்வது மிகவும் ஆபத்தானது என்கின்றார் சாணக்கியர். சிந்திக்காமல் பேசுபவர்களுக்கு தனிப்பட்ட ரகசியங்களை காப்பாற்றும் பழக்கம் இருக்காது. எனவே இவர்களிடம் துக்கத்தை பகிர்வது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |