இந்த 6 நபர்களை அவமதித்தால் நீங்கள் பாவியாவீர்கள்- சாணக்கிய நீதியில் திரட்டப்பட்ட தகவல்
பண்டைய காலத்தில் இந்தியாவின் சிறந்த ஆசிரியர், தத்துவஞானி மற்றும் அரச ஆலோசகர் என பன்முக கொண்டு சிறந்து விளங்கியவர் தான் சாணக்கியர்.
இவர் “கௌடில்யர்” என்ற பெயராலும் அழைக்கப்பட்டார்.
சாணக்கியர் வாழ்ந்த காலப்பகுதியில் வாழ்க்கை, வெற்றி பற்றிய மதிப்புமிக்க பல கொள்கைகள் உருவாக்கியிருக்கிறார்.
இவைகளையே அறிவுரைகளாக தொகுத்து இன்று மக்கள் சாணக்கிய நீதி என படித்து கொண்டிருக்கின்றனர்.
சாணக்கிய நீதியின் படி, குறிப்பிட்ட சிலரை ஒருபோதும் அவமதிக்கப்படக் கூடாது என கூறுகிறார். அவர்களை அவமதித்தால் உங்கள் வாழ்க்கையில் பெரிய பாவத்தை நீங்களே தேடிக் கொள்கிறீர்கள் என்று அர்த்தம் எனவும் சாணக்கியர் கூறுகிறார்.
அந்த வகையில், வாழ்க்கையில் மறந்தும் அவமதிக்கக் கூடாதவைகள் என்னென்ன என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
மறந்தும் அவமதிக்கக் கூடாதவைகள்
1. இந்து மதத்தில் பஞ்ச பூதங்களில் ஒன்றாக அக்னி கடவுள் பார்க்கப்படுகிறார். இவர் எந்தவொரு சுப காரியம் துவங்கும் முன்னரும் வந்து நிற்பார். இப்படி சிறப்பு கொண்ட நெருப்பின் மீது எச்சில் உமிழ்வது மிகப்பெரிய பாவமாகும். இது போன்ற பாவங்களை செய்பவர்கள் பாவத்தை சுமப்பார்கள்.
2. பொதுவாக மனிதர்களின் வாழ்க்கையை வடிவமைப்பதில் குருக்கள் முக்கிய இடம்பிடிக்கிறார்கள். அத்தகைய ஆசான்களை ஒருபோதும் அவமதிக்கக்கூடாது. அவர்களை மதித்து அவர்களின் ஆசியைப் பெற வேண்டும். இதனை மீறி நடப்பவர்கள் நல்லதொரு எதிர்காலத்தை அடைய மாட்டார்கள்.
3. கன்னிப் பெண்கள் தெய்வத்திற்கு சமமானவர்கள். இவர்களை ஒருபோதும் அவமதிக்கக்கூடாது. அவர்களை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கவும் கூடாது. இப்படி செய்தால் அது மிகப்பெரிய பாவம் என சாணக்கியர் கூறுகிறார்.
4. வீட்டில் இருக்கும் முதியவர்கள் அந்த வீட்டிற்கே வேர் போன்றவர்கள். இவர்களை ஒருபோதும் அவமதிக்கக்கூடாது. வீடுகளில் இருப்பவர்களை மட்டுமல்ல வெளியில் இருக்கும் பெரியவர்களையும் மதிக்க வேண்டும். அவர்களின் ஆசிர்வாதம் உங்களை ஏதாவொரு சமயத்தில் பாதுகாக்கும்.
5. இந்து மதத்தின் படி, பசுவை கோமாதா என அழைக்கிறார்கள். இவை முப்பத்து முக்கோடி கடவுள்களின் இருப்பிடமாக பசு கருதப்படுகிறது. ஆகையால் பசுவை மிதிப்பது அல்லது அவமதிப்பது தவறான செயல். இதனால் நீங்கள் பாவியாவீர்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |