இரண்டாம் பாகத்தில் நகரும் கேதுவால் கண்ணீரில் மூழ்கப்போகும் ராசிகள் இவர்கள் தான் உங்க ராசி என்ன?
கேது பகவான் தற்போது கன்னி ராசியில் அமர்ந்து ஹஸ்த நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் சஞ்சரிக்கிறார். இதன் பின்னர் ஹஸ்த நட்சத்திரத்தின் இரண்டாவது பாதத்தில் பின்னோக்கிய நகர்வில் சஞ்சரிக்கப் போகிறார்.
கேதுவின் பிற்போக்கு இயக்கம் சில ராசிகளுக்கு மோசமான நேரங்களையும் பலன்களையும் தரலாம். இது எந்தெந்த ராசிகள் என்பதை இங்கு பார்க்கலாம்.
துலாம்
கேது பகவானின் இந்த இரண்டாம் பாகத்தில் நிகழும் பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாக இல்லை. வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். நீங்கள் வாழ்க்கையில் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
வேலைகளை முடிப்பதில் தடைகள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். எதிரிகளால் தொல்லை அதிகரிக்கும். எனவே, எதிர்வினையாற்றாமல் அமைதியாக செல்வது பெரும்சேதத்தைத் தவிர்க்க உதவும். ஒவ்வொரு நொடியும் மிகவும் கவனத்துடன் செயற்பட வேண்டும்.
கன்னி
இந்த இரண்டாம் பெயர்ச்சி கண்டிப்பாக உங்களின் வாழ்வில் ஒரு அனுபவமாக இருக்கும். இதிக கெடுதல்கள் உண்டாகப்போவது உங்களுக்கு தான். தொழிலில், சக ஊழியர்களுடன் வாக்குவாதம் ஏற்படும் சூழ்நிலை ஏற்படலாம்.
பொருளாதார பிரச்னைகளை சந்திக்க நேரிடும். அளவுக்கு மீறிய செலவுகள் மனதை தொந்தரவு செய்யும். தேவையற்ற மன அழுத்தம் உருவாகலாம். அதில் இருந்து எச்சரிக்கையாக இருந்து தப்பிக்க வேண்டும். திருமணமானவர்களுக்கு உறவில் நிம்மதி இருக்காது. எனவே நீங்கள் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும்.
கடகம்
கேதுவின் இரண்டாவது பெயர்ச்சியால் பொருளாதார நிலைமையில் வீழ்ச்சி உண்டாகலாம். பணஇழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. நீங்கள் எதிர்மறையாக உணரலாம். வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம்.
உடல்நலமும் மனநலமும் மோசமடையக்கூடும். கணவன் மனைவி பிரச்னையில் கடகராசியினர், வாயே திறக்கக் கூடாது. அப்படியிருப்பதுதான் நல்லது. தொழிலும் பொறுமை மிக முக்கியம். இதிலிருந்து விடுபட சில பரிகாரங்களை செய்யலாம். இதனால் இதன் தாக்கத்தில் இருந்து விடுபட முடியும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |