சாண்டி உன்னை மன்னிக்கவே மாட்டேன்.... நள்ளிரவு மூன்று மணிக்கு கார்த்திக்கு நடந்த சோகம்
விருமன் படத்திற்கு நள்ளிரவில் சாண்டி மாஸ்டர் தன்னை சாகசம் செய்ய வைத்ததை நினைத்து நடிகர் கார்த்தி வெளியிட்டுள்ள பதிவு தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
விருமன் படம்
நடிகர் கார்த்தி மற்றும் அதிதி ஷங்கர் நடிப்பில், சூர்யா தயாரிப்பில்.. இயக்குனர் முத்தையா இயக்கத்தில், கடந்த வாரம் வெளியான திரைப்படம் 'விருமன்'.
ஒரு வாரத்தை கடந்தும், தொடர்ந்து சிறந்த விமர்சனங்களுடன் வசூல் சாதனை செய்து வருகிறது. இந்த படம் இதுவரை ரூ.35 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருப்பதாக கூறப்படும் நிலையில், 400க்கும் அதிகமான திரையரங்குகளில் இரண்டாவது வாரமும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளது.

நடிகர் கார்த்தி வெளியிட்ட உண்மை
இந்நிலையில் நடிகர் கார்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் சாண்டி மாஸ்டரை மன்னிக்க மாட்டேன் பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அவர் போட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது, நடுராத்திரி மூன்று மணிக்கெல்லாம் சாண்டி மாஸ்டர் என்னை சம்மர் சால்ட் அடிக்க வைத்தாயே, உன்னை மன்னிக்கவே மாட்டேன்.
ஆனால் இதற்கு முன் இந்த மாதிரி சாகசங்கள் நான் செய்ததே இல்லை, இனி எல்லா ஊர் திருவிழாவிலும் நம்ம பாட்டு மட்டும் தான் கண்டிப்பாக இருக்கும், யுவனின் வெறித்தனம்’ என்று பதிவு செய்துள்ளார்.
'விருமன் படத்தில் இடம்பெறும் ’வானம் கிடுகிடுங்க’ பாடலில் நடன காட்சி படமாக்கப்பட்டபோது கார்த்தியை சாண்டி சம்மர் சால்ட் அடிக்க வைத்ததை குறிப்பிட்டு தான் இப்படி ஒரு பதிவை போட்டுள்ளார்.
நடுராத்திரி மூணு மணிக்கெல்லாம் சம்மர்சால்ட் அடிக்கவுட்டியே @iamSandy_Off master, மன்னிக்கவேமாட்டேன். Never done these acrobats before ?
— Actor Karthi (@Karthi_Offl) August 18, 2022
இனி எல்லா ஊர் திருவிழாலயும் நம்ம பாட்டு கண்டிப்பா இருக்கும் @thisisysr ?https://t.co/TmZ3COwPPl#வானம்_கிடுகிடுங்க video song.