நடிகர் சரத்குமாரின் அதிரடி என்ட்ரியால் பிக் பாஸ் வீட்டில் ஏற்பட போகும் திடீர் திருப்பம்....!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதிப் போட்டிக்கு இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே இருப்பதால், பணப் பெட்டி டாஸ்க் இந்த வாரம் நடக்க இருக்கிறது.
இதற்காக யாரும் எதிர்பாராத விதமாக நடிகர் சரத்குமார் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தந்திருந்தார்.
பணப்பெட்டியை திறந்து வைத்து போட்டியாளர்களிடம் கண்ணாடி கூண்டிற்குள் இருந்து பேசினார்.

அவர் நடித்த திரைப்படம் ஒன்றின் ட்ரைலரும் போட்டு காட்டப்பட்டது.
பின்னர் பணப் பெட்டி டாஸ்க் குறித்து அறிவித்தார்.
தொகை உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாகவும், யாராவது ஒருவர் தான் வெற்றி பெற போகிறார் என்பதால் மற்றவர்களில் ஒருவர் இந்த பணத்தை எடுத்துக் கொண்டு வெளியேறுவது தான் புத்திசாலித்தனம் என்பது போல் மறைமுகமாக சொல்கிறார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் வழமையாக 5 லட்ச்சத்தில் இருந்து தான் போட்டி ஆரம்பிக்கும். இந்த முறை ரூ.3 லட்சத்தில் ஆரம்பித்திருக்கின்றது. ரூ.3 லட்சம் மட்டும் அனுப்பினால் யார் போவார்கள் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த பணப் பெட்டியை யார் எடுக்க போகிறார் என்பது ஒரே குழப்பமாக உள்ளது. இந்த பெட்டியை எடுக்க வைத்து யாரையாவது ஒருவரை அனுப்ப வேண்டும்... இதனை யார் செய்ய போகின்றார்கள் என்பது போட்டியாளர்களுக்குள்ளும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.