நெத்திலி மீன் குழம்பு இதுதானா? இலங்கை ஸ்டைலில் சூப்பர் டேஸ்டி ரெசிபி
ஞாயிற்றுக்கிழமை வந்துவிட்டால் ஆடு, கோழி கறி மட்டும் தான் சாப்பிட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
மாறாக கடலில் இருந்து கிடைக்கும் மீன், இறால், நண்டு போன்ற உணவுகளும் வாய்க்கு அறுசுவையை கொடுக்கும்.
கடலில் கிடைக்கும் நெத்திலி மீன் மிகவும் ருசியானது என்பது பலரும் அறிந்த விடயமாகும். சுமாராக 40 நிமிடங்களில் இந்த நெத்திலி மீன் குழம்பை தயாரித்துவிடலாம். மாங்காய் போட்டு சமைக்கும் போது நெத்திலி மீன் குழம்பின் ருசி இன்னும் அதிகமாகும்.
மீன் குழம்பு என்றாலே வீட்டில் வாசனை துளைக்கும். நெத்திலி மீன் குழம்பு என்றால் சொல்லவே தேவையில்லை. சில சைவ பிரியர்களும் விரும்பி உண்பார்கள்.
அந்த வகையில், நெத்திலி மீன் குழம்பு எப்படி தயாரிக்கலாம் என்பதை பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- நெத்திலி மீன்
- சின்ன வெங்காயம்
- மாங்காய்
- தக்காளி
- முருங்கை
- பூண்டு
- பச்சை மிளகாய்
- புளி
- தேங்காய் துருவல்
- மல்லித் தூள்
- மிளகாய் தூள்
- மஞ்சள் தூள்
- நல்லெண்ணெய்
- உப்பு பல்
- பூண்டு
செய்முறை
முதலில் ஒரு வாணலில் நல்லெண்ணெய் சேர்த்து அதில் வெந்தயம், கொத்தமல்லி, சோம்பு, சீரகம், வரமிளகாய் போட்டு தாளித்து, சின்ன வெங்காயம் சேர்த்து வதங்கவிடவும்.
அதனுடன் பூண்டு, கருவேப்பிலை சேர்த்து வதக்கி, துருவிய தேங்காய் பொன்னிறமாக வறுக்கவும். அடுத்து, தக்காளி சேர்த்து வதக்கிய பின்னர், ஆறவைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு போல் கலந்துகொள்ளவும்.
இதனை தொடர்ந்து ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி எடுத்துவைத்துள்ள வாழைப்பூவை கரைத்த மாவில் நனைத்து எண்ணெயில் பொறித்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து குழம்பு செய்ய ஒரு வாணலில் நல்லெண்ணெய் சேர்த்து மிதமான தீயில் வைத்து அதில் வெந்தயம், கடுகு சேர்த்து பொரிந்ததும் இதில் வரமிளகாய், பச்சைமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து கிளறவும். பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள் சேர்த்து கலந்து பின் கரைத்து வைத்திருந்த புளி தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து 15 நிமிடம் நன்கு கொதிக்கவிடவும்.
புளி நன்கு கொதித்து கெட்டியாகி வந்ததும் இதில் அரைத்து வைத்த மசாலா கலவை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
குழம்பு நன்கு கொதித்து வந்ததும் இதில் பொரித்த வாழைப்பூவை சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி இறுதியில் கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் சுவையான நெத்திலி மீன் குழம்பு தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |